ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்’ என்னும் முழக்கத்தொடர் வாயிலாக எவற்றை வலியுறுத்துவாய்?
Answers
Answered by
23
ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் என்னும் முழக்கத்தொடர் வாயிலாக வலியுறுத்தும் செய்தி
மரங்கள்
- மனிதனுக்கு இறைவன் கொடுத்த வரமே இயற்கை ஆகும்.
- அந்த இயற்கையின் செல்வங்களாக உள்ள மரங்களை நாம் அனைவரும் வளர்க்க வேண்டும்.
- மரங்கள் நமக்கு காய்கள், கனிகளை தருகின்றன.
- மரங்கள் வேர், தண்டு, இலை, மலர், காய்கள், கனிகள், விதைகள் என அனைத்து உறுப்பினையும் நமக்கு பயன்படும் பொருட்களாக தருகின்றன.
- மேலும் இவை மழைபொழிவை அதிகரித்தல், வெள்ளப் பெருக்கு, மண் அரிப்பு, நிலச்சரிவை தடுத்தல், உலக வெப்பமயமாதலை தடுத்தல் முதலியனவற்றிற்கு உதவுகிறது.
- ஆனால் தற்போது உள்ள நவீன காலக்கட்டங்களில் நாம் நம் சுயத்தேவைக்காக மரங்களை, காடுகளை அழித்து வருகிறோம்.
- இதன் காரணமாக வெப்பமயமாதல் உள்ளிட்ட பல இடர்கள் ஏற்படுகின்றன.
- இதை தவிர்க்க ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்.
Answered by
4
Explanation:
ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்’ என்ற முழக்கத் தொடர் வாயிலாக பின்வருவனவற்றை எடுத்துரைப்பேன்.
மழைக்கு ஆதாரம் மரம்.
உயிர்வளிக்கு உதவுவது மரம்.
மண் அரிப்பைத் தடுக்கும் மரம்.
மரம் தரும் நிழல் குளிர்ச்சி என்று கூறுவேன்.
Similar questions