‘நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்’ - இக்கவிதையின் அடி, ‘தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே’ என்னும் நாட்டுப்புறப் பாடலின் தொடர்ச்சியாய் அமைவதைப் பற்றி எழுதுக.
Answers
Answered by
13
நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்
- சூரியனின் ஒளிக்கதிர்களில் இருந்து வெளிப்படும் வெப்பத்தின் காரணமாக நீர்நிலைகளில் தேங்கிய நீர் ஆனது நீராவியாக மாறுவதை படித்திருக்கிறோம்.
- இதனை கவிஞர் தன் கற்பனையில் மழை பெய்ததும் தோன்றிய சூரியனே, தன் தாகத்தினை தீர்க்கும் பொருட்டு, தன் கதிர்களை உதடுகளாக மாற்றி, மழை நீரை உறிஞ்சி எடுப்பதாக பாடியுள்ளார்.
தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே
- தினமும் புல்நுனியில் உள்ள பனிநீர் ஆனது சூரியன் தோன்றியதும் மறைவதைக் கண்டு, பனிநீர் புல்நுனில் தூங்குவதாகவும், அந்த பனிநீரை கதிரவன் கதிர்கரத்தினை நீட்டி வாங்கிக் கொள்வதாகவும் நாட்டுப்புறப் பாடல் கூறுகிறது.
- நாட்டுப்புறப் பாடலில் உள்ள சொல் ஓசை நயத்துடன் அமைந்துள்ளது.
- அதே போல உதடுகள் குவித்து உறிஞ்சுவதாக கவிஞர் கூறுவது அவரின் கற்பனை நயத்தினை கூறுகிறது.
Similar questions