வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?
Answers
Answered by
32
வாடைக் காலத்தில் கோவலர்கள் பாதுகாப்பினைத் தேடும் விதம்
- பருவ மழையின் காரணமாக முல்லை நில மக்கள், பறவைகள், விலங்குகளின் வாழ்வில் ஏற்படும் மாற்றத்தினை நெடுநல்வாடை என்ற நூல் கூறுகிறது.
- வாடைக் காலத்தில் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளம் பெருகியது.
- தாழ்வான பகுதிகளில் வாழ்ந்த கோவலர்கள், பெருகி வரும் வெள்ளத்தினால் துயருற்றனர்.
- அவர்கள் தம் ஆநிரைகளை மேடான நிலங்களில் மேய விட்டனர்.
- அவர்கள் சூடியிருந்த காந்தள் மலர் மாலைகள் கசங்கிப் போய் இருந்தன.
- வாடைக் காலத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட மலையே நடுங்கும் அளவில் இருந்த குளிரிலிருந்து தப்பிக்க பாதுகாப்பைத் தேடினர்.
- பல ஆயர்கள் ஒன்று சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றினர்.
- எனினும் அதிக குளிரினால் அவர்களின் பற்கள் நடுங்கின.
Similar questions