காற்புள்ளி இடாமல் எழுதுவதனால் ஏற்படும் பொருள் மயக்கத்திற்குச் சான்று தருக.
Answers
Answered by
9
காற்புள்ளி என்பது நிறுத்தக்குறிகளுள் ஒன்றாகும். இக்குறி, பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், கருத்துத் தெளிவு துலங்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படுத்தப்படுகிறது.
ittu pola answer venumna enna follow panavum
Answered by
4
காற்புள்ளி இடாமல் எழுதுவதனால் ஏற்படும் பொருள் மயக்கம்
பொருள் மயக்கம்
- நாம் பேசும் போது பொதுவாக கருத்தினை உணர்ந்து கொள்வதில் எந்தவித குழப்பமும் ஏற்படாது.
- பேசும் போது ஏற்றத் தாழ்வுடனும், அழுத்தமுடனும் பேசுவதினாலும், தெளிவாக பேசுவதினாலும் இடைவெளி விட்டு பேசுவதை இடைவெளி விட்டு பேசுவதினாலும் பொருள் மயக்கத்தினை தடுத்துவிடலாம்.
- ஆனால் எழுதும்போது ஒரு காற்புள்ளியினை போட வேண்டிய இடத்தில் போடாவிட்டாலும், போடக்கூடாத இடங்களில் போட்டாலும் பொருளின் வேறுபாடு உண்டாகும்.
- இதனை பொருள் மயக்கம் என்பர்.
- (எ.கா) பவித்ரா, அக்கா வீட்டிற்கு சென்றாள் என்ற தொடர் பவித்ரா தன் அக்கா வீட்டிற்கு சென்றதையும், பவித்ரா அக்கா, வீட்டிற்கு சென்றாள் என்ற தொடர் பவித்ராவின் அக்கா, தன் வீட்டிற்கு சென்றாள் என்பதையும் குறிக்கிறது.
Similar questions