"உவா உற வந்து கூடும் உடுபதி, இரவி ஒத்தார்" – யார் யார்? அ) சடாயு, இராமன் ஆ) இராமன், குகன் இ) இராமன், சுக்ரீவன் ஈ) இராமன், சவரி
Answers
Answered by
11
இராமன், சுக்ரீவன்
கம்பராமாயணம்
- வால்மீகி வடமொழியில் எழுதியதை தழுவி தமிழில் கம்பர் எழுதிய காப்பியமே கம்பராமாயணம் ஆகும்.
- இது பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.
உவா உற வந்து கூடும் உடுபதி, இரவி ஒத்தா
- குறைவில்லாத வலிமை உடையவர்களும், வேண்டாத இருள் போன்றவர்களும் ஆகிய பகைவர்களை அழித்து அறங்கள் அனைத்தையும் நிலைபெறச் செய்வதற்கு ஏற்ற உரிய காலம் போல் இராமனும், சுக்ரீவனும் ஒருங்கி இருந்தார்கள்.
- ஆசையை அறவே ஒழித்த சிந்தையினை உடைய இராமனும், வானரத் தலைவனான சுக்ரீவனும் அமாவாசை காலத்தில் ஒன்றாக இணைந்து இருக்கிய சந்திரனையும் (உடுபதி), சூரியனையும் (இரவி) ஒத்து இருந்தார்கள்.
Similar questions