பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் - விளக்கம் எழுதுக.
Answers
Answered by
26
விரிந்த குடும்பம்
- சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு ஆனது விரிவடைந்து தலைவனின் பெற்றோரோடு வாழும் விரிந்த குடும்ப முறையும் இருந்தது.
- ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் ஆனது கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் கணவனின் தந்தை சேர்ந்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறைப் பற்றி கூறப்பட்டுள்ளது.
- இந்த குடும்ப அமைப்பில் நற்றாயை (பெற்ற தாய்) போல செவிலித்தாயும், அவளின் மகளாகிய தோழியும் முதன்மை பங்கு வகிக்கின்றனர்.
- சங்க கால மக்கள் இல்லற வாழ்வின் இறுதிக் காலத்தில் பெருமைகள் உடைய மக்களுடன் சேர்ந்து, அறத்தினை விரும்பிய சுற்றத்தோடு இணைந்து, தலைவனும் தலைவியும் மனையறம் காத்தலே இல்வாழ்வின் பயன் என எண்ணினார்கள்.
- அத்தகைய பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் ஆகும்.
Similar questions