குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது – எவ்வாறு? விளக்குக.
Answers
Answered by
21
குடும்பம்
- குடும்பம் என்ற அமைப்பு ஆனது குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம் என விரிவு அடைகிறது.
- மனித சமூகத்தின் அடிப்படை அலகாக குடும்பம் உள்ளது.
- குடும்பம், திருமணம் என இரண்டும் இணைந்தே செயல்படுகின்றன.
- கணவனின் இல்லத்தையும், மனைவியின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் வழக்கினை அகநானூற்றின் மருதத்திணைப் பாடலில் வரும் தம்மனை, நும்மனை என்ற சொற்கள் சுட்டிக் காட்டுகின்றன.
தாய், தந்தைவழி குடும்பம்
- சங்க காலத்தில் கண சமூகத்திற்கு தாயே தலைமை தாங்குகிறாள்.
- சேர நாட்டு மருமக்கள் தாய்முறை இதற்கு சிறந்த சான்று ஆகும்.
- தாய்வழிச் சமூக நிலையினை சிறுவர் தாயே, முதியோள் சிறுவன், இவளது மகன் முதலிய தொடர்கள் காட்டுகின்றன.
- மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே என்ற குறுந்தொகை பாடல் ஆனது தந்தைவழிக் குடும்ப முறையினை எடுத்துக் காட்டுகிறது.
தனி, கூட்டுக் குடும்பம்
- தனிக் குடும்பம் என்பது தாய், தந்தை, குழந்தை என மூவருள்ள குடும்பம் ஆகும்.
- ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் ஆனது கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் கணவனின் தந்தை சேர்ந்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறைப் பற்றி கூறப்பட்டுள்ளது.
- சங்க கால மக்கள் இல்லற வாழ்வின் இறுதிக் காலத்தில் பெருமைகள் உடைய மக்களுடன் சேர்ந்து, அறத்தினை விரும்பிய சுற்றத்தோடு இணைந்து, தலைவனும் தலைவியும் மனையறம் காத்தலே இல்வாழ்வின் பயன் என எண்ணினார்கள்.
- குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது.
Similar questions