இலக்கணக்குறிப்புத் தருக. அன்பும் அறமும், நன்கலம், மறத்தல், உலகு
Answers
Answered by
9
அன்பும் அறமும் - எண்ணும்மை
- எண்ணும் பொருளில் வரும் உம்மையிடைச் சொல் எண்ணும்மை என அழைக்கப்படுகிறது.
- (எ.கா) அன்பும் அறமும்.
நன்கலம் - பண்புத்தொகை
- பண்புப் பெயரைச் சேர்த்து வரும் பெயர்ச்சொல் பண்புத்தொகை என அழைக்கப்படுகிறது.
- (எ.கா) நன்கலம்.
மறத்தல் - தொழிற்பெயர்
- செயல்பாட்டினை உணர்த்தும் பெயர் தொழிற்பெயர் என அழைக்கப்படுகிறது.
- தொழிற்பெயர் ஆனது செயல், செய்கை, செய்தல், செயற்கை முதலிய பொருட்களில் வரும்.
- (எ.கா) மறத்தல்
உலகு - ஆகுபெயர்
- ஒரு சொல் அதன் பொருளை உணர்த்தாமல், அதனுடன் தொடர்புடைய வேறு பொருளை உணர்த்துவது ஆகுபெயர் என அழைக்கப்படுகிறது.
- (எ.கா) உலகு.
- இது உலகத்தினை உணர்த்தாமல் உலகில் உள்ள மக்களை குறிப்பதால் ஆகுபெயர் என அழைக்கப்படுகிறது.
Similar questions