வையகமும் வானகமும் ஆற்றலரிது – எதற்கு? அ) செய்யாமல் செய்த உதவி ஆ) பயன் தூக்கார் செய்த உதவி இ) தினைத்துணை நன்றி ஈ) செய்ந்நன்றிக்கு
Answers
Answered by
6
செய்யாமல் செய்த உதவி
திருக்குறள்
- உலக மக்கள் அனைவருக்கும் தேவையான பொதுவான கருத்துக்களை கூறுவதால் உலக பொதுமறை என திருக்குறள் அழைக்கப்படுகிறது.
- இது அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டு உள்ளது.
- முப்பால், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, உத்திரவேதம் என பல சிறப்புப் பெயர்களை கொண்டு உள்ளது.
- திருக்குறளின் சிறப்பினை விளக்க புலவர்களால் பாடப்பட்ட நூல் திருவள்ளுவமாலை ஆகும்.
செய்ந்நன்றி அறிதல்
- செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்ற லரிது.
பொருள்
- நாம் ஓர் உதவியும் செய்யாமல் இருக்க ஒருவர் நமக்கு செய்யும் உதவிக்கு ஈடாக இந்த மண்ணுலகையும், விண்ணுலகையும் கொடுத்தாலும் ஈடாகாது.
Similar questions
English,
4 months ago
Physics,
4 months ago
Computer Science,
4 months ago
Physics,
11 months ago
English,
11 months ago