கீழ்க்காணும் குறளில் ஏகதேச உருவக அணி எவ்வாறு பயின்று வருகிறது என்பதை விளக்குக. சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் ஏமப் புணையைச் சுடும்.
Answers
Answered by
9
கீழ்க்காணும் குறளில் ஏகதேச உருவக அணி எவ்வாறு பயின்று வருகிறது என்பதை விளக்குக. சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் ஏமப் புணையைச் சுடும்.
Answered by
12
ஏகதேச உருவக அணி
அணி விளக்கம்
- செய்யுளில் கூற எடுத்துக் கொண்ட கருத்துகளுள் ஒன்றை மட்டும் உருவகம் செய்து விட்டு, மற்றொன்றை உருவகம் செய்யாமல் கூறுவது ஏகதேச உருவக அணி என அழைக்கப்படுகிறது.
(எ.கா)
- சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
- ஏமப் புணையைச் சுடும்.
பொருள் விளக்கம்
- சினம், தன்மை சேர்ந்தாரை அழிக்கும் தன்மை உடையது.
- மேலும் அது சுற்றம் என்னும் பாதுகாப்புத் தெப்பத்தினை சுட்டு அழிக்கும் தன்மை உடையது ஆகும்.
- இந்த குறளில் சுற்றத்தார் பாதுகாப்பு தெப்பமாக உருவகம் செய்யப்பட்டு உள்ளார்.
- ஆனால் சினம் நெருப்பாக உருவகம் செய்யப்படாததால் இதில் ஏகதேச உருவக அணி பயின்று வந்துள்ளது.
Similar questions