நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர்கள்?
Answers
மாணாக்கரை அன்பினால் நெறிப்படுத்துதல்
- நான் ஆசிரியர் ஆக மாறினால், மாணவர்கள் என் பாடத்தினை படிப்பதை போல நான் அவர்களை படிப்பேன்.
- அதாவது அவர்களின் குணங்களை பற்றி அறிந்து கொள்வேன்.
- அதற்கு தகுந்தாற்போல பாடங்களை எடுப்பேன்.
- மாணவர்களிடம் ஒரு மரியாதை மிக் மதிக்கத்தக்க நண்பனை போல அன்புடன் பழகுவேன்.
- அவர்கள் சிறப்பாக செயல்படும் போது பாராட்டவும், தவறுகள் செய்யும் போது கடிந்துரைக்கவும் தயங்க மாட்டேன்.
- என்னை பொறுத்த வரையில் தண்டனை என்பது தவறை உணரவே தவிர, தவறு செய்தவரை தண்டிக்க அல்ல.
- எனவே மாணவர்கள் தவறு செய்தாலும் அதனை அன்புடன் எடுத்துக்கூறி மீண்டும் அந்த தவறு நடக்காதவாறு பார்த்துக் கொள்வேன்.
- குறைவாக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களிடம் அதிக அக்கறையுடன் பழகி பாடத்தினை புரிய வைப்பேன்.
Explanation:
(i) மாணாக்கர்களின் அறிவு, திறன்கள், மனப்பாங்கு , செயற்பாடுகள், பண்புகள், பாடரீதியான அடைவுகள் எல்லா மாணவர்களுக்கு ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற எனது மனநிலையை மாற்றுவேன்.
(ii) கற்றலில் பின்னடைவு அடைந்திருக்கும் மாணாக்கரை எக்காரணம் கொண்டும் கற்றலில் முழு அடைவு அடையும் மாணாக்கரோடு ஒப்பிட்டுக் கூறமாட்டேன் மாறாக, கற்றலில் அம்மாணவன் பின்னடைவு அடைந்ததற்கான காரணத்தைக் கண்டு அவனைத் தேற்றுவேன்.
(iii) கற்றலில் பின்தங்கிய மாணாக்கர் கற்றலில் இடர்ப்படுவதற்கான காரணத்தை இனங்கண்டு அவன் முழுமையான அடைவு எய்த நல்ல வழிகாட்டியாகச் செயல்படுவேன்.
(iv) எல்லா மாணாக்கரையும் அன்புடன் அணுகும் மனத்தைப் பெறுவேன். தகாத வார்த்தைகள், பொருத்தமற்ற வார்த்தைகளை ஒருபோதும் வகுப்பறையில் உச்சரிக்க மாட்டேன்.
(v) மாணக்கர்களின் குடும்பச்சூழல்களை உணர்ந்து அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளைக் கூறுவேன்.
(vi) மாணாக்கரோடு முரண்படுதல், எதிர்த்து நின்று செயற்படுதல் ; துன்புறுத்தல், மனம்நோக நடத்தல் என்பன போன்ற மனவேதனைப்படுத்தும் செயல்பாடுகளை முற்றிலும் தவிர்ப்பேன்.
(vii) நல்ல ஆசானாய் இருக்கும் என்னாலும் நல்ல அன்பானவனாய் இருக்க முடியும் என்பதை நிலைநிறுத்துவேன்.