மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க.
Answers
Answered by
18
மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
- திண்ணைப் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் ஆற்று மணலில் தான் எழுத கற்றுக் கொண்டனர்.
- அதன் காரணமாகவே அவர்களின் எழுத்து நேராகவும், கோணல் இல்லாமலும் இருந்தன.
- முதலில் ஆசிரியர் மணலில் எழுதுவார்.
- அதனை பார்த்த மாணவர்கள் அதன் மேலே எழுதப் பழகிய பின்பு தானே எழுத தொடங்கினர்.
- அதன் பிறகு எழுத்தாணியினை கொண்டு பனையோலைகளில் எழுதினர்.
- இதில் ஒற்று எழுத்துக்கு புள்ளி வைக்கமாட்டார்கள்.
- தனியாக உள்ள ஓலை ஏடு எனவும், ஏடுகளின் தொகுப்பு சுவடி எனவும் அழைக்கப்பட்டது.
- அதன் பிறகு பலகையும், பலப்பமும் வந்தன.
- இதில் எழுத்துக்கள் தெளிவாக இருந்தன.
- அதன் பிறகு காகிதம் வந்ததும் பென்சிலால் எழுதினர்.
- அதன் பிறகு கட்டைப்பேனா பயன்படுத்தப்பட்டது.
- தற்போது பந்துமுனைப் பேனா மற்றும் மையூற்று பேனா காகிதத்தில் எழுத பயன்படுத்தப்படுகின்றன.
Similar questions