வாயிலோயே எனத் தொடங்கும் ஒளவையாரின் புறநானூற்றுப்பாடல் பாடாண் திணைக்கு உரியது என்பதை நிறுவுக.
Answers
Answered by
1
வாயிலோயே எனத் தொடங்கும் ஒளவையாரின் புறநானூற்றுப் பாடல் பாடாண் திணைக்கு உரியது என்பதை நிறுவுதல்
பாடாண் திணை
- பாடாண் திணை - பாடு + ஆண் + திணை.
- ஆண் மகன் ஒருவனின் புகழ், வலிமை, கொடை, அருள் முதலியன நல்லியப்புகளைச் சிறப்பித்துக் கூறும் புறத்திணை பாடாண் திணை ஆகும்.
விளக்கம்
- வாயிலோயே எனத் தொடங்கும் ஒளவையாரின் புறநானூற்றுப் பாடலில் உள்ள வரிகளின் மூலம் சிற்றரசனான அதியமான் நெடுமான் அஞ்சியின் புகழ், வீரம், கொடை, அருள் முதலியன நல்லியப்புகளைச் சிறப்பித்துக் கூறப்பட்டு உள்ளது.
- எனவே வாயிலோயே எனத் தொடங்கும் ஒளவையாரின் புறநானூற்றுப் பாடல் பாடாண் திணைக்கு உரியது என்பது உறுதியாகிறது.
Answered by
0
'வாயிலோயே' எனத் தொடங்கும் ஔவையாரின் புறநானூற்றுச்செய்யுள் பாடாண் திணைக்கு உரியதாகும். பாடாண் திணை (பாடு + ஆண் + திணை) - பாடப்படும் ஆண்மகனது ஒழுக்கம். அஃதாவது ஒருவன் புகழ் வலிமை, வள்ளன்மை, அருள், வீரம், வெற்றி முதலியவற்றைத் தெரிந்து புகழ்ந்து பாடுவதாகும்.
ஒளவையார் தமக்குப் பரிசில் தாராது கால நீட்டிப்புச் செய்வதைக் கடிந்து பாடும் இப்பாடலிலும் "பரிசிலர்க்கு அடையா வாயி லோயே” என்று குறிப்பிட்டு, அதியமானின் வள்ளல் தன்மையைச் சிறப்பித்துக் கூறுவதால் இப்பாடல் பாடாண் திணைக்குரியதேயாகும்.
Similar questions