பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்தெழுதுக.
Answers
Answered by
16
பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகள்
கற்பித்தல் முறைகள்
- பண்டைக் காலத்தில் ஆசிரியருக்கும், மாணவர்களும் இடையே நடைபெறும் கருத்துப் பரிமாற்றமாக கற்பித்தல் இருந்தது.
- திண்ணைப் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் சரளமாக எழுத, பேசும் மொழித்திறன் மிக்கவராக விளங்கினார்.
- மாணவர்களை இலக்கியம், இலக்கணம், வாய்ப்பாடு என அனைத்தினையும் மனனம் செய்ய வைத்து தெளிவு பெறச் செய்வார்.
- வினாக்கள் கேட்பதன் வாயிலாக மாணவர்களை மதிப்பீடு செய்வார்.
- மாணவர்களுக்கு ஆர்வமிருந்தால் வியாபாரம், கணிதம் பற்றியும் கற்பிப்பார்.
கற்றல் முறைகள்
- மாணவர்களின் மொழித்திறனும், செயல்திறனும் கண்காணிக்கப்படும்.
- மாணவர்கள் வினாக்கள் கேட்டும், விடைகள் கூறியும் கற்றுக் கொண்டனர்.
- மாணவர்கள் அடிப்படை நூல்களை மனனம் செய்தனர்.
- நிகண்டு, வாய்ப்பாடுகளை தலைகீழ் மனப்பாடமும் செய்தனர்.
- மாணவர்கள் அந்தாதி முறை மற்றும் எதுகை மோனையினை கொண்டும் தங்களின் செய்யுள்களை மனப்பாடம் செய்தனர்.
Similar questions