சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு – இக்கூற்று நனவாக நாம் செய்யவேண்டியன யாவை?
Answers
Answered by
13
சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு
- இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துகளில் 15% தமிழ்நாட்டில்தான் நடைபெறுகிறது.
- அதிலும் குறிப்பாக தமிழக சாலை விபத்துகளில் 35% இரு சக்கர வாகனங்களினாலே ஏற்படுகிறது.
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசிக் கொண்டே அல்லது காதில் கேட்பிகளை மாட்டிக் கொண்டு பாடல்கள் கேட்டுக் கொண்டே வாகனம் ஓட்டுவது, வாகனத்தினை முந்தி செல்ல வேகமாக ஓட்டுவது முதலியன சாலை விபத்துக்கள் ஏற்பட காரணமாக உள்ளது.
- இதனால் உடல் உறுப்புகள் இழப்பு, உயிர் இழப்பு ஏற்படுகிறது.
- இதனை தவிர்க்க முறையான சாலை விதிகளை பின்பற்றி, தலைக்கவசம் அணிந்து கொண்டு வாகனம் ஓட்டினால் ஓரளவு சாலை விபத்துக்களை தவிர்க்கலாம்.
- பொதுமக்களும், மாணவர்களும் சாலையின் நடுவே செல்வது, திடீரென சாலையினை கடப்பது, ஓடும் பேருந்தில் ஏறுவது, இறங்குவது முதலியன செயல்களில் ஈடுபடாமல் இருந்தாலும் சாலை விபத்துகளை தவிர்த்து சாலை விபத்தில்லாத் தமிழ்நாட்டினை உருவாக்கலாம்.
Answered by
1
this is fixed answer super b answer
Attachments:
Similar questions