காலை இளம் வெயில் நன்றாக மேய, தும்பறுத்துத் துள்ளிவரும் புதுவெயில் இக்கவிதையில் _________ பயின்று வந்துள்ளது. அ) பயன் படிமம் ஆ) வினைப்படிமம் இ) மெய்ப்படிமம் ஈ) உருப்படிமம்
Answers
Answered by
2
வினைப்படிமம்
படிமம்
- படிமம் என்பது விளக்க வந்த ஒரு காட்சியையோ அல்லது கருத்தையோ காட்சிப்படுத்திக் காட்டுகிற உத்தி என அழைக்கப்படுகிறது.
- உவமை உருவகம் போலப் படிமமும் வினை, பயன், மெய் (வடிவம்), உரு (நிறம்) ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும்.
(எ.கா)
- காலை இளம் வெயில் நன்றாக மேய, தும்பறுத்துத் துள்ளிவரும் புதுவெயில்
விளக்கம்
- இணைத்துக் கட்டப்பட்ட தும்பில் இருந்து அறுத்துக் கொண்டு கன்று துள்ளிக் குதித்தல் என்பது அனைவரும் அறிந்த ஒரு இயல்பான காட்சி ஆகும்.
- இந்த காட்சியினை கொண்டு காலை இளம் வெயிலின் அழகினை, கன்றின் செயலோடு ஒப்பிட்டு படிமப்படுத்துகிறது இந்த கவிதை.
- எனவே காலை இளம் வெயில் நன்றாக மேய, தும்பறுத்துத் துள்ளிவரும் புதுவெயில் என்ற கவிதையில் வினைப் படிமம் பயின்று வந்துள்ளது.
Similar questions