சென்னை வெறும் நகரம் மட்டுமல்ல, அது நம்பிக்கை மையம் – காரணம் – அ) நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளின் களம் ஆ) மென்பொருள், வன்பொருள், வாகன உற்பத்தியில் பங்கு இ) மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலை ஈ) அ, ஆ, இ – அனைத்தும்
Answers
Answered by
1
அ, ஆ, இ – அனைத்தும்
சென்னை நகரம்
- இன்றைய சென்னை வெறும் நகரம் மட்டுமல்ல, அது நம்பிக்கை மையமாக திகழ்கிறது.
- சென்னை நகரின் வளர்ச்சியில், நகரினை மையமிட்டு உருவான தொழிற்சாலைகள், நிறுவனங்கள் முதலியன ஏற்படுத்திய நேரடி, மறைமுக வேலைவாய்ப்புக்கள் ஆனது பெரும் பங்கினை வகித்தன.
- இன்றைய சென்னை நகரம் ஆனது கணினி மென்பொருள், வன்பொருள், வாகன உற்பத்தி ஆகியவற்றில் முக்கிய பங்கினை வகித்து வருகிறது.
- மென்பொருள் ஏற்றுமதியில் இந்திய அளவில் முன்னிலை வகிக்கும் நகரமாக சென்னை விளங்குகிறது.
- மேலும் இது மின்னணுப் பொருட்களை உருவாக்கும் மையமாகவும் விளங்குகிறது.
- சென்னை நகரமானது வரலாற்று தொன்மை, தொழில் வளம், சிறந்த மக்கள், துறைமுக வசதி, நவீன தொழில்நுட்ப வசதிகள் முதலியன உடைய உலகப் புகழ்பெற்ற நகரமாக திகழ்கிறது.
Similar questions