கூற்று : இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர். காரணம் : கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்ததாகவே இருந்தது. அ) கூற்று சரி, காரணம் தவறு ஆ) கூற்று தவறு, காரணம் சரி இ) கூற்று தவறு, காரணம் தவறு ஈ) கூற்று சரி, காரணம் சரி
Answers
Answered by
2
கூற்று சரி, காரணம் சரி
சென்னை நகரம் உருவாக்கம்
- கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்ததாகவே இருந்தது.
- இதன் காரணமாக இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.
- நெசவாளர்களால் வண்ணத்துக்காரன் பேட்டை (வண்ணாரப் பேட்டை), சின்னதறிப் பேட்டை (சிந்தாதிரிப்பேட்டை) முதலிய புதிய பகுதிகள் உருவாக்கப்பட்டன.
- மேலும் எழும்பூர், திருவல்லிக்கேணி, புரசை வாக்கம், தண்டையார்ப் பேட்டை, திருவொற்றியூர் முதலிய கிராமங்கள் இணைக்கப்பட்டன.
- வட சென்னைப் பகுதிகள் மதராசப்பட்டினம் எனவும் தென் சென்னைப் பகுதிகள் சென்னைப் பட்டினம் எனவும் அழைக்கப்பட்டன.
- ஆங்கிலேயர்கள் இரண்டையும் சேர்த்து மதராஸ் என அழைத்தனர்.
- இதுவே பின்னர் மெட்ராஸ் என மாறி, தற்போது சென்னையாக மாறியுள்ளது.
Similar questions