சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில், இன்றும் நிலைத்து இருப்பனவற்றைக் குறிப்பிடுக
Answers
Answered by
2
Answer:
hey mate ☺☺☺☺
Explanation:
சென்னையில் வாழும் பலதரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாகச் சென்னையின் கலாச்சாரம் விளங்குகிறது. நவீனமும் பாரம்பரியமும் இங்கு கலந்து காணப்படுகிறது.
சென்னையில் வருடந்தோறும் டிசம்பர் மாதம் முழுவதும் இசைத் திருவிழா இசை ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் தினந்தோறும் சென்னையின் பல இடங்களில் கர்நாடக சங்கீத கச்சேரிகள் நடத்தப்படுகின்றன. சென்னை அடையாறில் உள்ள கலாக்ஷேத்ராவில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் வந்து பரதநாட்டியமும் மற்ற பாரம்பரியக் கலைகளும் பயின்று செல்கின்றனர்.
தமிழ் மற்றும் ஆங்கில நாடகங்கள் வருடந்தோறும் அரங்கேற்றப்படுகின்றன. சென்னையிலும் சுற்றுப்புறங்களிலும் உள்ள கல்லூரிகளில் வருடந்தோறும் கலைத்திருவிழாக்கள் மாணவர்களால் நடத்தப்படுகின்றன.
mark me asbrainliest
Answered by
2
சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில், இன்றும் நிலைத்து இருப்பன
- ஆவணங்களை முறையாகக் கையாளும் பழக்கம் உடைய ஆங்கிலேயர் உருவாக்கிய மெட்ராஸ் ரெக்காட் ஆபிஸ் ஆனது சாரசனிக் கட்டட முறையில் அமைந்தது.
- இது இன்று தமிழ்நாடு ஆவணக் காப்பகம் என அழைக்கப்படுகிறது.
- எழும்பூர் அருங்காட்சியகமும் கோட்டை அருங்காட்சியகமும் தென்னிந்திய வரலாற்றை அறிய, பண்பாட்டை புரிந்துகொள்ள உதவுகிறது.
- இந்தியாவின் முதல் பொது நூலகமான கன்னி மாரா நூலகம் ஆனது நவீனமாக வளர்ந்து வரும் பெரிய நூலகம் ஆகும்.
- இந்திய திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய சென்னைக்குத் திரைப்படத் தொழில் சார்ந்த இடங்கள், திரையரங்கம் முதலியன குறிப்பிடத்தகுந்த அடையாளங்கள் ஆகும்.
- இவைகளே சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில், இன்றும் நிலைத்து இருப்பன ஆகும்.
Similar questions