“கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன” – இது குறித்து உங்கள் கருத்தை விவரிக்க.
Answers
கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன
அன்றைய கிராமங்கள்
- அன்றைய கிராமங்கள் இயற்கை வனப்பும் பச்சை பசேலென வயல் வெளிகளும் நிறைந்ததாக விளங்கின.
- எங்கு பார்த்தாலும் நெற்பயிர்களும், கரும்பு தோட்டங்களும், மரங்களும், சிறு சிறு ஏரிகளும், குளங்களும், கோவில்களும், நீரோடைகளும் என இயற்கையின் தவப்பிள்ளைகளாக கிராமங்கள் விளங்கின.
- பெரும்பாலான குடிசை, ஓட்டு வீட்டுகள், ஒரு சில மாடி வீடுகள், ஆடு, மாடு, கோழி என வளர்ப்பு பிராணிகள் நிறைந்ததாக கிராமங்கள் விளங்கின.
- திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பெரும்பாலும் வீடுகளிலேயே நடைபெறும்.
- உறவினர்கள் நிகழ்ச்சிக்கு முன்பே வந்து தாங்களே சமைத்து அனைவரும் ஒன்று சேர்ந்து உணவு உண்டனர்.
- குழந்தைகள் பாட்டி தாத்தாக்களின் அரவணைப்பில் வாழ்ந்தனர்.
- கோவில் திருவிழாக்களில் கரகம், மயிலாட்டம் போன்ற கிராமிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இன்றைய கிராமங்கள்
- விவசாயத்தினையே முக்கிய தொழிலாக கொண்ட கிராமங்களில் தற்போது விளை நிலங்கள் விலை நிலங்களாக மாற்றப்படுகின்றன.
- நாகரிக வளர்ச்சியில் தற்போது இயற்கையினை இழந்து நகரத்தினை போல கிராமங்களும் மாடி வீடுகள், வண்டி வாகனங்கள் உடையதாக மாறி வருகின்றன.
- திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மண்டபங்களில் நடத்தப்பட்டு, வேறு ஒருவரிடம் உணவு சமைத்தல், பரிமாறும் பொறுப்பினை தருகின்றனர்.
- திருவிழாக்களில் கிராமிய நிகழ்ச்சிகள் நடைபெறாமல் சினிமா நிகழ்ச்சிகளே நடைபெறுகின்றன.
- குழந்தைகள் தற்போது பாட்டி, தாத்தாக்களின் அரவணைப்பு இல்லாமல், யாரிடமும் பேசாமல் செல்போன்களே கதியென கிடக்கின்றனர்.
- இவ்வாறு கிராமங்கள் தங்களின் முகவரியினை இழந்து வருகின்றன.
Answer:
Explanation:“கிராம ங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன” – இது குறித்து உங்கள் கருத்தை விவரிக்க.
இயற்கையோடு இயைந்து வாழ்ந்த நம் தலைமுறையினர் கால மாற்றத்தாலும், பல்வேறு காரணங்களினாலும் கிராமத்தை விட்டு நகரத்தை நோக்கி நகர்கின்றனர்.
பெரும்பாலும் கிராமங்கள் செயல்பாடுகள் அனைத்தும் கையேடு வாழ்க்கை போன்றது.
அங்கு கடினமான உழைப்பும், விவசாயமும் தவிர பிற தொழில் சார்ந்த வளர்ச்சி காணப்படுவதில்லை.
முறையான தொலைத்தொடர்பு, மருத்துவ வசதி சுகாதார அமைப்பு காணப்டுவதில்லை.
இந்தியாவில் 57 மில்லியன் குழந்துைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளனர். இவர்களில் பெரும்பாலும் கிராமங்களில் வசிப்பவரே.
இன்றும் சில கிராமங்களில் கோயில் நுழைவு தீண்டாமை, சாதி அமைப்பு, மதக்கலவரம் போன்ற சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகிறது.
நகரத்திலோ எந்தவித பாகுபாடு இல்லாமல் சம வாய்ப்போடு வாழ இயலுவதால் நகரத்தை நோக்கி புலம் பெயர்கின்றனர்.