சென்னையில் உள்ள மயிலாப்பூர், கந்த கோட்டப் பகுதிகள் செய்யுளில் எவ்விதம் காட்சிப்படுத்தப்படுகின்றன?
Answers
Answered by
10
சென்னையில் உள்ள மயிலாப்பூர், கந்த கோட்டப் பகுதிகள்
பங்குனி உத்திரப் பெருவிழா
- திருமயிலை கபாலீச்சரம் கோவிலில் எழுந்து அருளியிருக்கும் இறைவனுக்குப் பூசையிடப்படும் எழுச்சி மிகுந்த விழாவே பங்குனி உத்திரப் பெருவிழா ஆகும்.
- பங்குனி உத்திரப் பெருவிழா ஆனது ஆரவாரம் நிறைந்தது எனவும், திசை தோறும் பூசையிடும் விழா எனவும், பல்லியங்களும், இன்ன பிற கருவிகளும் சேர்ந்து இசைத்துப் பெரும் ஒலி எழுப்பும் விழா எனவும் திருஞான சம்பந்தர் அவர்கள் பங்குனி உத்திரப் பெருவிழா நடைபெற்ற முறையினைப் பற்றி தம் தேவாரப் பதிகத்தில் பதிவு செய்கிறார்.
கந்தக் கோட்டம்
- சென்னையின் வடபகுதியில் உள்ள கந்தக் கோட்டம் ஆனது இராமலிங்க அடிகளால் தெய்வமணிமாலை என்ற தலைப்பில் சிறப்பிக்கப்படுகிறது.
- வள்ளலாரின் மனதில் ஆன்மநேய ஒருமை, சமய ஒருமை, ஒளி வழிபாடு முதலிய சிந்தனைகள் தோன்றிய இடமாக சென்னை கந்தக் கோட்டம் உள்ளது.
- தருமமிகு சென்னையில் கந்தக் கோட்டத்துள்வளர் தலமோங்கு கந்தவேளே என்ற வரிகள் இங்கு உள்ள முருகனையும், சென்னையின் கந்தக் கோட்டத்தினையும் சிறப்பிக்கிறது.
சான்றோர் போற்றும் சென்னை
- அறம் செய்வார் நிறைந்தது என சென்னையினை வள்ளலார் தன் பாடல்களால் கூறுகிறார்.
- திருஞானசம்பந்தர் இயற்றிய திருமயிலைப் பதிகத்தில் திருமயிலையின் சிறப்பும், வள்ளலார் அவர்கள் எழுதிய தெய்வ மணிமாலையில் உள்ள கந்தக் கோட்டத்தின் பெருமையும், தருமமிகு சென்னையின் பெருமையும் கூறப்பட்டுள்ளது.
Similar questions
Math,
4 months ago
English,
4 months ago
Social Sciences,
8 months ago
Social Sciences,
8 months ago
Math,
11 months ago
History,
11 months ago