எண்வகை மெய்ப்பாடுகள் யாவை?
Answers
Answered by
2
Answer:
மெய்யில் படுவது மெய்ப்பாடு. அதாவது உள்ளத்து உணர்ச்சிகள் உடலில் தென்படுவது மெய்ப்பாடு. தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் உள்ள ஒன்பது இயல்களில் ஒன்று மெய்ப்பாட்டியல். தொல்காப்பியம் காட்டும் மெய்ப்பாடுகள் எட்டு. அவை தோன்றும் இடங்கள் என்று ஒவ்வொன்றும் 4 வகைகளாகப் பகுத்துக் காட்டப்பட்டுள்ளன. அன்றியும் 32 மெய்ப்பாடுகள் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன. மெய்ப்பாடுகள் தோன்றும் இடங்களை உரையாசிரியர்கள் சுவை என்கின்றனர். இவை உடலின் மெய்ச்சுவைகள். அதாவது மெய்யுணர்வுகள்.[1] இவை அனைத்தும் புறப்பொருளில் தோன்றுவன.
Answered by
3
எண்வகை மெய்ப்பாடுகள்
தொல்காப்பியம்
- தமிழில் கிடைத்து உள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்.
- இது தொல்காப்பியரால் இயற்றப்பட்ட நூல் ஆகும்.
- இந்த நூலினை தொல்காப்பியர் தொகுத்தும், பகுத்தும், சேர்த்தும் இயற்றியுள்ளார்.
- இது இலக்கண நூலாக இருந்தாலும் இலக்கிய வடிவிலேயே இயற்றப்பட்டு உள்ளது.
- தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்கள் உள்ளன.
- ஒவ்வொரு அதிகாரத்திலும் 9 இயல்கள் வீதம் மூன்று அதிகாரங்களில் மொத்தமாக 27 இயல்கள் உள்ளன.
- தொல்காப்பிய உரையாசிரியர்களுள் இளம்பூரணார், தெய்வச் சிலையார், நச்சினார்க்கினியர், கல்லாடனார், சேனாவரையர், பேராசிரியர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆகும்.
- மெய்ப்பாடுகள் பற்றி தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது.
- சிரிப்பு, அழுகை, சிறுமை, வியப்பு, அச்சம், பெருமை, சினம், மகிழ்ச்சி என மெய்ப்பாடுகள் எட்டு வகைப்படும்.
Similar questions