பின்னணி இசை படத்தின் காட்சியமைப்புக்கு எவ்வாறு உயிரூட்டும்? சான்று தருக
Answers
Answered by
6
பின்னணி இசை
- பின்னணி இசை ஆனது படத்தில் உள்ள கதா பாத்திரங்களின் மனக் கவலைகள், அலைக் கழிப்புகள் ஆகியவற்றினை எதிரொலிப்பதாகவும், எடுத்துக் காட்டுவதாகவும் இருக்க வேண்டும்.
- மேலும் பின்னணி இசை ஆனது கதா பாத்திரங்களின் உணர்வுகளுக்கு விரிவுரை வழங்குவதாக இருக்க வேண்டும்.
- அதே போல மவுனம், உரையாடலை விட அதிகம் பேசுவதாக இருக்கும்.
(எ.கா)
- சன்னல் வழியே கதாநாயகி தலையினை நீட்டி வெளியே தெரியும் ஒரு காட்சியினை வெறித்து பார்க்கின்றாள்.
- அந்த காட்சியில் ஒரு தெருவில் கார் புறப்பட்டு செல்லும் ஒலி இணைக்கப்படுகிறது.
- இதில் அவளைப் அவளைப் பார்க்க வந்தவர், அவள் விருப்பத்திற்கு மாறாக அங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறார் என்ற கதையினை அப்பெண்ணின் முகபாவனை மற்றும் இசை மூலமாக வெளிப்படுத்தப்படும்.
- இவ்வாறு பின்னணி இசை படத்தின் காட்சியமைப்புக்கு உயிரூட்டுகிறது.
Similar questions