India Languages, asked by anjalin, 7 months ago

ஒருமுக எழினி, பொருமுக எழினி – குறிப்பு எழுதுக.

Answers

Answered by abip0609
5

iam a Tamil teacher in world wide College ( I got award for this speech put me as brain liest

தொகு

தமிழர் நாடகக்கலையின் தோற்றத்தினை விவரிக்கும் நூற்களில் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுவது அகத்தியம் என்னும் தலைச்சங்க காலத்து நூலாகும். நாடகம் என்பது பாட்டும், உரையும், நடிப்பும் என்பது தமிழ் மரபுவழி கூறும் இலக்கணமாக விளங்குகின்றது. சங்க காலத்தில் குணநூல், கூத்தநூல், சயந்தம் நூல், மதிவாணர் நாடகத் தமிழர், முறுவல் போன்ற நாடக நூல்கள் இருக்கப்பெற்றன என்பதனை சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றது குறிப்பிடத்தக்கது. மேலும் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூற்களில் தமிழ்நாடகக்கலை பற்றிய சான்றுகள் பல உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருளடக்கம்

தமிழ் நாடகத் தோற்றம் தொகு

“ மோனத்து இருந்த முன்னோன் கூத்தில்

உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே

ஓசையில் பிறந்தது இசையின் உயிர்ப்பே

இசையில் பிறந்தது ஆட்டத்து இயல்பே

ஆட்டம் பிறந்தது கூத்தினது அமைவே

கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே

நாட்டியம் பிறந்தது நாடக வகையே

— (கூத்தநூல் - தோற்றுவாய்)

இறைவன் ஆடிய ஆதிக்கூத்தில், உடுக்கையிலிருந்து பிறந்தது ஓசை; ஓசையின் சுழலிலிருந்து இசையின் உயிர்ப்பும், அதனின்று ஆட்டமும், ஆட்டத்திலிருந்து கூத்தின் அமைதியும் (ஒழுங்கு), அவ்வமைதியிலிருந்து நாட்டியக் கோப்பும் (ஒழுங்கு) அவ்வித ஒழுங்கிலிருந்து நாடக வகைகளும் தோன்றின எனக் கூத்தநூலில் உள்ள பின்வரும் பாடல்வரிகள் விளக்குகின்றன. இவ்வாறு பிறந்த நாடகம், தொல்காப்பியர் காலத்தில் வளர்ச்சியடைந்து புகழ்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பண்ணை தொகு

“ "பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்

கண்ணிய புறனே நானான் கென்ப"

தொல்காப்பியரின் மெய்ப்பாட்டியலில் உள்ள முதலாம் நெறியாகும் இப்பாடல் வரிகள். பண்ணை எனக்குறிக்கப்பட்டுள்ளது விளையாட்டு ஆகும். உள்ளத்தில் உவகையூட்டுதலின் காரணத்தினால் நாடகம் பண்ணையென அழைக்கப்பெற்றது. தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய 'நச்சினார்க்கினியர்' கூறும் பின்வரும் உரை விளக்கத்தினால் 'பண்ணை' என்னும் சொல்லின் மெய்ப்பொருளினை அறியலாம்.

பாடல்கள் தொகு

தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில்:

“ "நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

பாடல் சான்ற புலனெறி வழக்கம்"

எனத் தொல்காப்பியர் தனது வாழ்நாளினிலும் முற்பட்ட இலக்கிய மரபினைப் பற்றி விளக்குகையில் 'பாடல் சார்ந்த' எனப் பொருள்படும் 'பாடல் சான்ற' எனக் கூறுகின்றார். இவ்வரியில் குறிப்பிட்டதனை ஆராய்ந்தால் தொல்காப்பியர் வாழ்ந்ததற்கு முற்பட்ட காலகட்டங்களிலேயே தமிழில் நாடகமும், நாடகங்களில் பாடல்களும் இடம்பெற்றிருந்ததும் என்பதனை அறியலாம்.

சுவைகள் தொகு

நாடக வழக்கினைப் பற்றித் தொல்காப்பியம் கூறும் நூற்பாவானது

“ "நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று

அப்பா லெட்டாம் மெய்ப்பா டென்பர்-"

நாடக வழக்கென்பது சுவைபட வருவதையெல்லாம் ஓரிடத்தில் வந்தனவாகத் தொகுத்துக் கூறுதலென விளக்குகின்றது இவ்வரிகள்.மேலும் இச்சுவைகள் தோன்றும் நிலைக்களன்கள் (பொருள்கள்) மூலம் முப்பத்திரண்டு சுவைகள் அடங்கும். இப்பொருள்கள் இரண்டு வகைப்படும் அவையாவன பொருளின் தன்மையினை மட்டும் உணர்த்தி,வடிவம் உணர்த்தப்படாதது ஒன்று மற்றொன்று பொருளின் தன்மையினையும் உணர்த்தி வடிவத்தினையும் உணர்த்துவதாகும்.இவ்விருவகையில் பொருளின் தன்மையினை மட்டும் உணர்த்தி வடிவம் உணர்த்தப்படாதனவை:காமம், வெகுளி (சினம்), மயக்கம், இன்பம், துன்பம் முதலியனவாகும். வடிவங்கள் இல்லாத இப்பொருள்களை,பொறிகளின் வாயிலாக மனங்கொள்வதற்கு மெய்ப்பாடுகள் காரணமாக அமைகின்றது.இம்மெய்ப்பாடானது கண்ணீர், மெய்மயிர் சிலிர்த்தல், வியர்வுதல், நடுக்கம் முதலியன புறக்குறிகள் கொண்டு ஒருவரது அகவுணர்வுகளை ஆழ்ந்து ஆராயாமலே, காண்போர்க்கு புலனாகும் தன்மையே மெய்ப்பாடு எனப்படும்.இவ்வகைச் சுவைகளே நடிப்பின் இன்றியமையாக் கூறுகளாக உலகின் அனைத்து நாடுகளிலும்,அனைத்து மொழி நாடகம்,திரைப்படம் போன்ற கலை வடிவங்களிலும் கருதப்படுகின்றன.மேலும் இத்தகு நாடகச்சுவைகளினைப் பற்றித் தொல்காப்பியர் அவர் காலத்தில் குறிப்பிட்டுள்ளதனால் அவருக்கு முற்பட்ட காலத்திலேயே தமிழர் நாடகக்கலை பிரசித்தி பெற்றிருக்க வேண்டுமென்பதுமாகக் கருதப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

அரங்கம் தொகு

அரங்க அளவு தொகு

கி. பி. இரண்டாம் நூற்றாண்டளவில் தோற்றம்பெற்ற சிலப்பதிகாரத்தில் நாடக அரங்கத்தின் அளவுகளைப் பற்றி இப்பாடல் வரிகள் விளக்குகின்றன.

“ "நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்

கோலளவு இருப்பத்து நல்விர லாக

எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து

ஒருகோல் உயரத்து உறுப்பின தாகி

உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை

வைத்த இடைநிலம் நாற்கோ லாக

ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்

தோன்றிய அரங்கில்

— (சிலப்பதிகாரம் - அரங்கேற்றுக்காதை 99-106-வது வரிகள்)

அரங்கம் அளக்கப்பயன்படும் கோள்|கோளானது, கண்ணிடை ஒரு சாண்கொண்ட மூங்கிலைக் கொண்டு, மனிதர் ஒருவரின் பெருவிரல் இருபத்துநான்கு கொண்ட அளவில் ஒரு கோல் நறுக்கினர்.அதுவே அக்கால அளவு கோலாகும்.

எட்டு அணுக்கள் கொண்டது ஒரு தேர்ந்துகள். எட்டு தேர்ந்துகள் கொண்டது ஒரு இம்மி. எட்டு இம்மிகள் கொண்டது ஒரு எள். எட்டு எள் கொண்டது ஒரு நெல். எட்டு நெல் கொண்டது ஒரு பெருவிரல்.

இவ்வகை அளவு முறையினையே பண்டைக்காலத் தமிழர் பயன்படுத்தினர்.சிலப்பதிகாரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் அரங்கின் அகலம் ஏழு கோலாகவும். நீளம் எட்டு கோலாகவும் குறட்டின் உயரம் (அடைக்கல்) ஒரு கோல் ஆகவும் அமைத்து அரங்கின் மேற்பகுதியில் பலகை பதித்து அதற்கும் தூண்களின் மேல் பாவிய உத்தரப்பலகைக்கும் இடையே நான்குகோல் உயரம் இருக்கச் செய்து அரங்கத்தினுள் செல்லவும், வெளியேறுவதற்கும் இரண்டு வாயில்கள் அமைத்துத் தூண்களின் நிழல்கள், ஆடும் இடத்தில் (நாயகப்பத்தியில்) விழாமல் ஒளிவிடும் (மாண்சுடர் காந்தும்) நிலை விளக்குகளையேற்றினர்.

திரைகள் தொகு

மூன்று வகையான திரைகள் பண்டைக்காலந்தொட்டு உபயோகத்திலிருந்து வந்தன. அவையாவன:

(

Answered by steffiaspinno
12

ஒருமுக எழினி, பொருமுக எழினி

சில‌‌ப்‌ப‌திகார‌ம்

  • கோவல‌ன், க‌ண்ண‌கி, மாத‌வி என பொது ம‌‌க்களை‌ப் ப‌‌ற்‌றி இய‌ற்‌ற‌ப்ப‌ட்ட த‌மி‌ழி‌‌ன் முத‌ல் கா‌ப்‌பிய‌ம் ‌சில‌ப்ப‌திகார‌ம் ஆகு‌ம்.
  • இது குடிம‌க்களை‌ப் ப‌ற்‌றியதாக உ‌ள்ளதா‌ல், குடிம‌க்க‌ள் கா‌ப்‌‌பிய‌ம் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • மேலு‌ம் இது மூவே‌ந்‌த‌ர் கா‌ப்‌பிய‌ம், மு‌த்த‌மி‌ழ் கா‌ப்‌பிய‌ம், உரை‌யிடை‌‌யி‌ட்ட பா‌ட்டுடை‌ச் செ‌‌ய்யு‌ள் எனவு‌ம் அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • இதனை இய‌ற்‌றியவ‌ர் இள‌ங்கோவடி‌க‌ள் ஆகு‌ம்.  

ஒருமுக எழினி

  • ஒருமுக எழினி எ‌ன்பது மாத‌வி‌யி‌ன் நா‌ட்டிய‌ அர‌ங்கே‌ற்ற‌த்‌தி‌ற்காக அமை‌க்க‌ப்ப‌ட்ட மேடை‌யி‌ல், ஒரு ப‌க்க‌த்‌தி‌லிரு‌ந்து மறு ப‌க்க‌த்‌தி‌ற்கு‌ச் செ‌‌ல்லு‌மாறு ‌அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌திரை ஆகு‌ம்.  

பொருமுக எ‌ழி‌னி  

  • பொருமுக எ‌ழி‌னி எ‌ன்பது மாத‌வி‌யி‌ன் நா‌ட்டிய‌ அர‌ங்கே‌ற்ற‌த்‌தி‌ற்காக அமை‌க்க‌ப்ப‌ட்ட மேடை‌யி‌‌ன் இரு புற‌த்‌தி‌லிரு‌ந்து‌ம் நக‌ர்‌த்த‌ப்ப‌ட்டு, நடு‌வி‌ல் ஒ‌ன்றோடு ம‌ற்றொ‌ன்று பொரு‌ந்துமாறு ‌அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌திரை ஆகு‌ம்.
Similar questions