திரைப்படைத்துறை என்பது ஆயிரம் பேரைக் காப்பாற்றும் தொழிலா? அல்லது கலைகளின் சங்கமமா? உங்கள் பார்வையைக் கட்டுரையாக்குக
Answers
Answered by
3
Answer:
காட்சிக் கலைகளுள் ஒன்றான சிற்பக்கலை. தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரத்துச் சிற்பங்களுள் ஒன்று
காட்சிக் கலைகளுள் ஒன்றான ஓவியக்கலை. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீனத்து ஓவியம்.
Answered by
7
திரைப்படைத்துறையின் உண்மை நிலை
திரைப்படம்
- திரை அரங்கிற்கு சென்று திரையில் ஊடுருவி வரும் ஒளியின் மூலம் காணும் பல காட்சிகளின் தொகுப்பே திரைப்படம் ஆகும்.
- இது திரையில் காண்பதால் திரைப்படம் எனவும் பெயர் பெற்றது.
- நாம் பார்த்து நன்றாக உள்ளது, சரியில்லை என கூறும் ஒரு திரைப்படத்தினை உருவாக்குவது எளிதாக செயல் அல்ல.
- பலரின் கூட்டு முயற்சி, கடின உழைப்பு, பணம் முதலியன தேவைப்படுகிறது.
திரைப்படம் தயாரித்தல்
- கதை உருவாக்கம், நடிகர்கள் தேர்வு, உரையாடல் எழுதுதல், பாடல் எழுதுதல், பாடலுக்கு இசை அமைத்தல், இடங்களை தேர்வு செய்தல், படமாக்கல், ஒலி, ஒளிப்பதிவுகளை செய்தல், தணிக்கை குழுவிற்கு அனுப்புதல், படத்தினை வெளியிட திரை அரங்குகளை தேடி பிடித்தல், பத்திரிக்கை முதலிய ஊடகங்களுக்கு செய்தி தெரிவித்தல் முதலிய பல செயல்களுக்கு பின்னர்தான் திரைப்படம் திரையரங்கில் திரையிடப்படுகிறது.
ஆயிரம் பேரைக் காப்பாற்றும் தொழில்
- திரைப்படத்தினை உருவாக்கும் செயல்களுக்கு நூற்றுக்கணக்கான பேர் தேவைப்படுகின்றனர்.
- அவர்களுக்கு உரிய நேரத்தில் உணவு, ஊதியம் தர வேண்டும்.
- இவ்வாறு வேலை செய்யும் மக்களின் குடும்பம் திரைப்படத்தினை நம்பியே உள்ளது.
- இவ்வாறு ஆயிரம் பேரைக் காப்பாற்றும் தொழிலாக திரைப்படத்துறை உள்ளது.
கலை
- திரைப்படத்தில் வசனங்கள் மட்டுமின்றி ஆடல், பாடல் போன்ற கலைகளும் தேவைப்படுகிறது.
- களரி, அடிமுறை போன்ற தற்காப்புக் கலைகளும் சண்டைக் காட்சியில் இடம்பெறுகின்றன.
- சில இயற்கையான இடங்களுக்கு பதிலாக அவற்றினை வரைந்து அங்கு இருப்பது போல படம் எடுப்பர்.
- இவ்வாறு ஓவியம் கலையும் வளர்க்கப்படுகிறது.
- இவ்வாறு திரைப்படத்துறை மறைமுகமாக பல கலைகளை வளர்க்கும் துறையாக உள்ளது.
Similar questions