மகாநடிகரைக் கண்ட பாலசந்திரனின் மனவோட்டத்தை நயத்துடன் எழுதுக
Answers
Answered by
16
மகாநடிகரைக் கண்ட பாலசந்திரனின் மனவோட்டம்
சிவாஜியை காணல்
- சுள்ளிக்காடு என்ற கட்டுரையின் ஆசிரியர் பாலச்சந்திரன் அவர்கள் நடிகர் சிவாஜியை முதன் முதலாக நேரில் பார்க்க அவரின் வீட்டிற்குச் சென்றிருந்தார்.
- அவரை முதன் முதலாக கண்ட காட்சியினை கைவீசி, பார்வை இடை அசையாடு மெல்ல மெல்லச் சிங்கநடை நடந்து வரும் அந்த மகாநடிகரை பார்க்கும் போது, இராஜராஜசோழன் போல் இருந்தது என எழுதுகிறார்.
சிவாஜியின் இளமைப் பருவம்
- சிவாஜியின் இயற்பெயர் வி.சி. கணேசன் (விழுப்புரம் சின்னையா கணேசன்) ஆகும்.
- ஆங்கிலேயரால் சிறை சென்ற தம் தந்தையை இவர் தன் ஒன்பதாவது வயதில்தான் முதன்முதலாக பார்த்திருக்கிறார்.
- பள்ளிக்கூடம் செல்லும் ஐந்து வயதில் குடும்பத்தினை காக்க, நாடக குழுவில் சேர்ந்தார்.
சிவாஜி
- அண்ணாத்துரையின் நாடகத்தில் சத்ரபதி சிவாஜியாக நடித்தார் வி.சி. கணேசன்.
- அவரின் நடிப்பினை பாராட்டிய பெரியார் அவருக்கு அளித்த பட்டமே சிவாஜி ஆகும்.
- இதுவே அவரின் பெயராக மாறியது.
- பராசக்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாக இவரை வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற திரைப்படமே உலகறிய செய்தது.
விருதுகள்
- நடிப்பின் பிறப்பிடமாக உள்ள சிவாஜி கணேசன் அவர்கள் கெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருது, தாதாசாகெப் பால்கே விருது, பிரெஞ்ச அரசின் செவாலியர் விருது முதலியன விருதுகளை பெற்று உள்ளார்.
பிறவிக் கலைஞன்
- சிவாஜியை காணச் சென்ற ஒருவர் வீரபாண்டிய கட்டபொம்மனின் வசனம் உங்களுக்கு நினைவிருக்கிறதா எனக் கேட்டதற்கு தலை போனாலும் மறக்கமுடியுமா? என கூறி அந்த வசனங்களை பேசிக் காட்டி நடிப்பிறக்காகவே பிறந்தக் கலைஞன் என்பதை நிரூபித்தார்.
Similar questions