அரசரோடு நட்புப் பாராட்டினாலும் செய்யத்தகாதன யாவை?
Answers
Answered by
0
அரசரோடு நட்புப் பாராட்டினாலும் செய்யத்தகாதன
திருக்குறள்
- உலக பொதுமறை என அழைக்கப்படும் திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டு உள்ளது.
- முப்பால், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, உத்திரவேதம் என பல சிறப்புப் பெயர்களை கொண்டு உள்ளது.
- திருக்குறளின் சிறப்பினை விளக்க புலவர்களால் பாடப்பட்ட நூல் திருவள்ளுவமாலை ஆகும்.
மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
- அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார்.
விளக்கம்
- குளிருக்காக நெருப்பினை கொளுத்தி தீக்காய்பவர், எவ்வாறு நெருப்பினை விட்டு விலகிச் செல்லாமலும், நெருப்பிற்கு அருகில் செல்லாமலும் இருக்கிறாரோ, அது போலவே அரசனை சார்ந்து வாழ்பவர் அரசனிடம் பக்குவாய் நடந்து கொள்ள வேண்டும்.
Similar questions