அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார் – இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
Answers
Answered by
13
தொழில் உவமை அணி
அணி விளக்கம்
- ஒரு பொருளின் செயல் அல்லது தொழில் காரணமாக அமையும் உவமை அணி ஆனது தொழில் உவமை அணி என அழைக்கப்படுகிறது.
(எ.கா)
- அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
- இகல்வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார்.
பொருள்
- குளிருக்காக நெருப்பினை கொளுத்தி தீக்காய்பவர், எவ்வாறு நெருப்பினை விட்டு விலகிச் செல்லாமலும், நெருப்பிற்கு அருகில் செல்லாமலும் இருக்கிறாரோ, அது போலவே அரசனை சார்ந்து வாழ்பவர் அரசனிடம் அளவிற்கு அதிகமாக நடக்காமல் பக்குவாய் நடந்து கொள்ள வேண்டும்.
விளக்கம்
- அரசனை சார்ந்து வாழ்பவரின் ஒழுகுமுறையினை தீக்காய்பவரின் தொழில் முறைக்கு உவமையாக கூறப்பட்டுள்ளதால் இந்த குறட்பாவில் தொழில் உவமை அணி ஆனது பயின்று வந்துள்ளது.
Similar questions
Physics,
4 months ago
Social Sciences,
4 months ago
Biology,
4 months ago
Science,
10 months ago
Biology,
10 months ago
Environmental Sciences,
1 year ago