எடுத்துக்காட்டு உவமையணியை விளக்கிக் கீழ்க்காணும் குறளுக்கு இவ்வணியைப் பொருத்தி எழுதுக. துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுஉண்பார் கள்உண் பவர்
Answers
Answered by
2
எடுத்துக்காட்டு உவமை அணி
அணி விளக்கம்
- உவமானத்தினை வேறாக கூறி, உவமேயத்தினை வேறாக கூறி, உவமை மற்றும் உவமேயத்திற்கு இடையே ஒப்புமையினை கூறும் உவம உருபு கொடுக்காமல் கூறுவது எடுத்துக்காட்டு உவமை அணி என அழைக்கப்படுகிறது.
(எ.கா)
- துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும்
- நஞ்சுஉண்பார் கள்உண் பவர்.
பொருள்
- உறங்கியவர் அறிவு செயல்படாததால் இறந்தவரை போல கருதப்படுகிறார்.
- அது போலவே கள் உண்பவரும் அறிவு செயல்படாததால் நஞ்சு உண்பவராகவே கருதப்படுவார்.
விளக்கம்
- குறளில் உறங்கியவர் இறந்தவராக கருதப்படுவது உவமை, கள் உண்பவர் நஞ்சுபவராக கருதப்படுவது உவமேயம்.
- ஆனால் உவம உருபு இல்லாததால் இது எடுத்துக்காட்டு உவமை அணி ஆகும்.
Similar questions