வாளையும் பாம்பையும் எவ்வகைப் பகைக்குச் சான்றாக வள்ளுவர் கூறுகிறார்?
Answers
Answered by
1
பகைக்கு சான்றாக வாள் மற்றும் பாம்பு
உட்பகை
- வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக
- கேள்போல் பகைவர் தொடர்பு.
- உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
- பாம்போடு உடன் உறைந்தற்று.
விளக்கம்
- வாளினை போல வெளிப்படையாக பகை கொள்பவரிடம் அஞ்ச வேண்டாம்.
- ஆனால் உறவினர் போல பழகி உள்ளே பகை கொள்பவரிடம் பழக அஞ்ச வேண்டும்.
- மனதில் உடன்பாடு இல்லாதவருடன் (உள்ளே பகையினை வளர்ப்பவர்) வாழ்கின்ற வாழ்க்கை ஆனது ஒரு குடிசையில் பாம்பு உடன் வாழ்வதற்கு ஒப்பானது ஆகும்.
- வெளிப்படையான பகைக்கு வாளையும், மனதில் உடன்பாடு இல்லாதவருடன் (உள்ளே பகையினை வளர்ப்பவர்) வாழ்கின்ற வாழ்க்கைக்கு பாம்பு உடன் வாழ்வதையும் சான்றாக வள்ளுவர் கூறுகிறார்.
Similar questions