திருக்குறள் ஒரு வாழ்வியல் இலக்கியம் – நிறுவுக.
Answers
Answered by
12
திருக்குறள் ஒரு வாழ்வியல் இலக்கியம்
அறிவு
- அறிவு அழிவு வராமல் பாதுகாக்கும் கருவியாகவும், பகைவரால் அழிக்க இயலாத பாதுகாப்பு அரணாகவும் உள்ளது.
சிற்றினம் சேராமை
- நல்ல குணமுடையவர்களை விட சிறந்த துணையும் இந்த உலகில் இல்லை.
- தீய இனத்தினைவிடத் துன்பத்தை தரும் பகையும் இல்லை.
வினைத்திட்பம்
- நல்ல செயல்பாட்டிற்கு மன உறுதியே தேவை.
- யாரையும் உருவத்தினை வைத்து மதிப்பிடாமல் அவரின் திறமை மற்றும் பண்பினை வைத்து எடை போட வேண்டும்.
தூது
- தன் கடமை என்ன என்பதை தெளிவாக அறிந்து, அதனை செய்வதற்கு ஏற்ற காலத்தினையும், இடத்தினையும் ஆராய்ந்து சொல்கின்றவரே சிறந்த தூதுவர் ஆவார்.
மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
- அரசனை சார்ந்து வாழ்பவர் அரசனிடம் பக்குவாய் நடந்து கொள்ள வேண்டும்.
உட்பகை
- வாளினை போல வெளிப்படையாக பகை கொள்பவரிடம் அஞ்ச வேண்டாம்.
- ஆனால் உறவினர் போல பழகி உள்ளே பகை கொள்பவரிடம் பழக அஞ்ச வேண்டும்.
கள் உண்ணாமை
- உறங்கியவர், இறந்தவரைவிட வேறுபட்டவர் இல்லை.
- அது போலவே கள் உண்பவரும் நஞ்சு உண்பவராகவே கருதப்படுவார்.
சூது
- ஒருவருக்கு பல துன்பங்களைத் தந்து, அவரின் புகழினைக் கெடுக்கின்ற சூதினை விட அவருக்கு வறுமையினை தருவது வேறொன்றும் இல்லை.
- மேற்கண்ட பல அதிகாரங்கள் மூலமாக வாழ்வியல் கருத்தினை கூறி திருக்குறள் வாழ்வியல் இலக்கியமாக உள்ளது.
Similar questions
Social Sciences,
4 months ago
Hindi,
4 months ago
English,
8 months ago
World Languages,
11 months ago
English,
11 months ago