எந்தவொரு பொருளைப் பயன்படுத்தும்போதும் அதற்குப் பின்னால் உள்ள மனிதர்களின் உழைப்பை நாம் சிந்திப்பதில்லை. ஒரு தேநீரைப் பருகும்போது அதற்குப் பின்னால் உள்ள மனித உழைப்பைச் சிந்தித்து உங்கள் கருத்தை எழுதுக
Answers
Answered by
0
தேநீர்க்கு பின்னால் உள்ள மனித உழைப்பு
தேநீர்
- நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக தேநீர், காபி முதலியன உள்ளன.
- ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை உணவிற்கு இடையே பருகும் ஆகாரமாக தேநீரும், காபியும் உள்ளன.
- பல ஏழைகள் தொழிலாளர்கள் வெறும் தேநீரினை குடித்துவிட்டு மட்டுமே தங்களின் வேலையினை செய்து வருகின்றனர்.
- அத்தகைய தேநீர் எப்படி உருவாகிறது.
- தேநீருக்கு தேவையான முக்கிய பொருட்கள் பால், தேயிலை, சர்க்கரை, தண்ணீர் முதலியன ஆகும்.
- தேநீரினை பருகும் நாம் என்றாவது தேயிலை, சர்க்கரை ஆலையில் உள்ள தொழிலாளர்களை நினைத்தது உண்டா?
- நாம் குடிக்கும் ஒரு குவளை தேநீரில் ஆயிரக்கணக்கான தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பு, அவர் பட்ட கஷ்டங்கள், கரும்பிலிருந்து சர்க்கரையினை உருவாக்கும் ஆலையில் வேலை செய்யும் தொழிலாளர்களின் உழைப்பு, பால் கொடுக்கும் பசுவினை வளர்க்க விவசாயி தரும் உழைப்பு முதலியன இருக்கிறது.
- இத்தகைய தொழிலாளர்களின் உழைப்பினை தேநீராக குடிக்கும் நாம் நம்மால் இயன்ற உதவிகளை அவர்களுக்கு செய்வோம்.
Similar questions