செவியறிவுறூஉ துறையை விளக்குக
Answers
புறநானூறு சங்ககால வரலாற்றை அறிய உதவும் பழமையான நூல். அதில் உள்ள ஒவ்வொரு பாடலும் இன்ன திணையைச் சேர்ந்தது என்றும், இன்ன துறையைச் சேர்ந்தது என்றும் பகுத்துக் காட்டப்பட்டுள்ளது. இந்தப் பகுப்பு தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படவில்லை, புறப்பொருள் வெண்பாமாலை இலக்கணத்தையும் தழுவவில்லை.
புறநானூற்றைத் தொகுத்தவர் அதில் உள்ள ஒவ்வொரு பாடலுக்கும் திணை, துறை பற்றிய குறிப்புகளைத் தந்துள்ளார். தொல்காப்பியர் அகத்திணையாகக் கொள்ளும் கைக்கிளை, பெருந்திணை ஆகியவற்றைப் புறநானூற்றுத் திணைக்குறிப்பு புறத்திணையில் வைத்துள்ளது. தொல்காப்பியரின் புறத்திணையில் இல்லாத பொதுவியல் என்னும் திணைக்குறிப்பு புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ளது. இவற்றால் தொல்காப்பியப் பாகுபாடு புறநானூற்றுப் பாடல்களின் திணைக்குறிப்புக்குப் பயன்படுத்தப்படவில்லை என்பது தெளிவாகிறது. துறைக் குறிப்புக்குப் புறப்பொருள் வெண்பாமாலை பயன்படுத்தப்படவில்லை என்பதை புறநானூற்றில் உள்ள இயன்மொழி என்னும் துறையிலுள்ள பாடல்களால் அறியலாம். எனவே, புறநானூற்றுத் திணை, துறைக் குறிப்புகளுக்குப் பயன்பட்ட இலக்கண நூல் பன்னிரு படலம் எனக் கொள்ளக்கிடக்கிறது.
புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள துறைகளின் பெயர்களை அகர வரிசையில் இங்குக் காணலாம். அதனைச் சொடுக்கி அந்தந்த துறையின் விளக்கத்தையும் பெறலாம்.
செவியறிவுறூஉ துறை
புறநானூறு
- புறப்பொருள் பற்றிய 400 பாடல்களை உடைய நூல் புறநானூறு ஆகும்.
- பழந்தமிழர்களின் வாழ்வியல் கருவூலமாக திகழும் எட்டுத்தொகை நூல் புறநானூறு ஆகும்.
- புறநானூறு நூலானது பழந்தமிழர்களின் நாகரிகம், செல்வம், மக்களின் வாழிடங்கள், போர் நிகழ்வுகள், அரசர்கள் வரலாறு, குறுநில மன்னர்கள் வரலாறு, வானவியல், இயற்பியல் போன்ற பல தகவல்கள் இடம்பெற்று உள்ளன.
- ஒவ்வொரு பாடலின் கீழும் பாவகை, திணை, துறை முதலியன இடம்பெறும்.
செவியறிவுறூஉ துறை
- நம் பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள பிசிராந்தையார் எழுதிய பாடலில் உள்ள துறை செவியறிவுறூஉ துறை ஆகும்.
- அரசன் தவறுதலாகச் செயல்பட நேரும் போது, அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறை தவறாமல் செய்யும் வகையில், அரசனுக்கு அறிவுரையாகக் கூறுவதே செவியறிவுறூஉ துறை ஆகும்.