சங்ககால வரலாற்றை அறிந்துகொள்ள, புகளூர்க் கல்வெட்டு எவ்வகையில் துணைபுரிகிறது – விளக்குக.
Answers
Answered by
8
சங்ககால வரலாற்றை அறிந்துகொள்ள துணைபுரியும் புகளூர் கல்வெட்டு
புகளூர் கல்வெட்டு
- கரூரை அடுத்துள்ள புகளூரில் உள்ள ஆறுநாட்டான் குன்றில் உள்ள ஒரு குகையில் நான்கு வரிகளில் எழுதப்பட்ட ஒரு பிராம்மிக் கல்வெட்டு உள்ளது.
- இந்த கல்வெட்டு ஆனது சேர மன்னர்களை பற்றியதாக உள்ளது என கண்டறியப்பட்டது.
- கல்வெட்டில் புலப்படாத எழுத்து, அகராதியில் அடங்காத சொற்கள் இருப்பதால் கல்வெட்டினை ஆராய்வது மிக கடினமான பணி ஆகும்.
தமிழ் பிராம்மிக் கல்வெட்டு
- பொதுவாக தமிழ் பிராம்மிக் கல்வெட்டு ஆனது ஒரே வரியில், மூன்று அல்லது நான்கு சொற்களைக் கொண்டதாகவே இருக்கும்.
- ஆனால் ஆறுநாட்டான் குன்றின் குகையில் உள்ள பிராம்மிக் கல்வெட்டு ஆனது நான்கு வரிகளில் உள்ளது.
கல்வெட்டு செய்திகள்
- தமிழ் பிராம்மிக் கல்வெட்டின் முதல் வரியில் இது யாற்றூர் என்ற இடத்தினை சார்ந்த செங்காயபன் என்ற சமணத் துறவியின் வசிப்பிடம் என குறிப்பிட்டு இருந்தன.
- இரண்டாம் வரியில் கோ என்ற முதல் சொல்லில் தொடங்கி, பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ, இளங்கோ என பெயர்கள் இடம் பெற்று இருந்தன.
- சங்க நூல்களில் மட்டுமே உள்ள பண்டைய தமிழ் மன்னர்களின் பெயர்கள் தமிழகத்தில் முதன்முறையாக புகளூர் குகைக் கல்வெட்டில் இடம்பெற்று உள்ளது.
- இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த இந்த கல்வெட்டினை சேரல் இரும்பொறை மன்னர்கள் பொறித்ததாகக் குறிக்கப்படுகிறது.
- தன் ஆய்வின் மூலம் புகளூர்க் கல்வெட்டுச் செய்திகளை வெளிப்படுத்தியவர் திரு. ஐராவதம் மகாதேவன் ஆவார்.
Similar questions
English,
6 months ago
Social Sciences,
6 months ago
Math,
6 months ago
Math,
1 year ago
Social Sciences,
1 year ago
Business Studies,
1 year ago
Math,
1 year ago
Chemistry,
1 year ago