India Languages, asked by anjalin, 8 months ago

குறியீட்டு உத்தியின் அடிப்படை இலக்கணங்களை எழுதுக.

Answers

Answered by akanshaagrwal23
18

Explanation:

பல்கலைக்கழக விவரம்

பல்கலைக்கழக பெயர் புதுவைப் பல்கலைக்கழகம்

நகரம் புதுச்சேரி

மாவட்டம்

அஞ்சல் குறியீட்டு எண் 605 014

ஆய்வாளர் விவரம்

ஆய்வாளர் பெயர் தி. அமுதன்

நகரம் புதுச்சேரி

ஆய்வு விவரம்

தலைப்பு தமிழ் இலக்கண நூல்களில் உத்திகள்

வகைமை இலக்கணம்

துணை வகைமை பொது

பதிவு நாள் 2006

நெறியாளர் அ. அறிவு நம்பி

துணை நெறியாளர் அ. அறிவு நம்பி

ஆய்வு விளக்கம்

ஆய்வு நோக்கம்

உத்தி பற்றிப் பழைய இலக்கணநூல்களும் உரையாசிரியர்களும் தற்கால அறிஞர்களும், நிகண்டு. அகராதி போன்றனவும் கூறும் கருத்துக்கள் யாவை எனக் காண்பதும் தமிழ் இலக்கணநூல்களின் வழி உத்தியின் வளர்ச்சி நிலையினைக் காண்பதும் உரைகளில் உத்தி பயன்பட்ட தன்மையைக் காண்பதும் உத்திக்கும் அழகு, குற்றம், அணி முதலிய பிற இலக்கணக் கூறுகளுக்கும் உள்ள தொடர்பை ஆராய்வதும் இலக்கண ஆசிரியர்களும் உரையாசிரியர்களும் உத்திகளைச் சுட்டும் நிலையில் எவ்வாறு ஒன்றுபடுகின்றனர் அல்லது வேறுபடுகின்றனர் என்பதைக் காண்பதும். இவற்றின் அடிப்படையில் தமிழ் இலக்கண உத்திக் கோட்பாட்டை வரையறுப்பதும் இவ்வாய்வின் நோக்கங்களாகும்.

கருதுகோள்

இலக்கணநூல்கள் பயன்படுத்திய உத்தி என்பது வடமொழிக்குரியது என இரா. இராகவையங்கார், வையாபுரிப்பிள்ளை போன்றோர் கருதுகின்றனர். மொழியாயினும் வேறு துறைகளாயினும் தொழில் நுட்பம் என ஒன்றில்லாமல் எந்தப் படைப்பும் அல்லது பொருளும் உருவாகாது. அத்தொழில் நுட்பம் என்னும் உத்தி சிறந்ததாகவோ, சிறப்புக் குறைந்ததாகவோ இருக்கலாம். ஆனால் உத்தியில்லாமல் படைப்பு நிகழாது என்பது வெளிப்படை. மொழிநூல் அறிஞர், தமிழும் வடமொழியான சமசுகிருதமும் வெவ்வேறான மொழிகள் என உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இலக்கணநூல்களின் அடிப்டையில் தமிழுக்கெனத் தனியான உத்திக்கோட்பாடு உண்டு என்பதைக் கருதுகோளாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பெறுகிறது.

இயல் பிரிப்பு

இவ்வாய்வேடு முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஐந்து இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை, 1. உத்தி ஓர் அறிமுகம் 2. தமிழ் இலக்கண நூல்களில் உத்திகள் 3. உரையாசிரியர்கள் சுட்டும் உத்திகள் 4. உத்திகளைப் பற்றிய சிந்தனைகளும் பொருள் வரையறையும் 5. உத்திகளின் பயன்பாடு என்பனவாகும்.

முடிவுரை

தொல்காப்பியத்தின் உத்திப்பட்டியல் உள்ள மரபியல் பகுதிக்கு இளம்பூரணர், பேராசிரியர் இருவர் உரைகளே கிடைக்கின்றன. அவர்கள் அப்பகுதியில் உத்திகளுக்கான வரையறையைக் கொடுத்துள்ளனர். நன்னூலின் உத்திகளுக்கு உரையாசிரியர்களில் காலத்தால் முந்தையவர்களான மயிலைநாதர், சங்கரநமச்சிவாயர், சிவஞானமுனிவர் ஆகியோர் உத்திகளை வரையறை செய்யவில்லை. ஆனால் தம் உரையில் உத்திகளைப் பொருத்திக்காட்டியுள்ளனர். இவர்களுக்குப்பின்வந்த இராமானுசக் கவிராயர் போன்றோர் உத்திகளை வரையறை செய்துள்ளனர். தொல்காப்பிய உரையாசிரியர்கள் பெரும்பாலும் தம் உரையில் ‘இந்நூற்பா இவ்வுத்திக்கு உரியது’ என்று சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால் பொருத்திக்காட்டி விளக்குவிதில்லை. நன்னூல் உரையாசிரியர்கள் உத்திகளை நூற்பாக்களில் சுட்டிக் காட்டுவதோடு அவற்றைப் நூற்பாக் கருத்தோடு பொருத்தியும் காட்டுகின்றனர். மாறனலங்கார உரையாசிரியர் சில இடங்களில் பொருத்திக் காட்டுகிறார். சங்கரநமச்சிவாயர் ஒரு நூற்பாவிற்குச் சுட்டிக்காட்டிய உத்தியையே அவருக்குப் பின்வந்த நன்னூல் உரையாசிரியர்கள் தத்தம் உரைகளில் வேறுபட்ட உத்திகளை உரைக்கின்றனர். தொல்காப்பியப் பட்டியலில் கூறப்பட்ட 32 உத்திகள் இளம்பூரணர், போராசிரியர் இருவரும் எல்லா உத்திகளையும் தம் உரைகளில் பயன்படுத்தாமல் சில உத்திகளை மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். சான்றாக இளம்பூரணர் தம் உரையில் தொல்காப்பியம் கூறியவற்றில் 13 உத்திகளை மட்டுமே பயன்படுத்தியுள்ளார். நச்சினார்க்கினியர் மிகுந்த அளவாக 17 உத்திகளைப் பயன்படுத்தியுள்ளார். இளம்பூரணர் தாம் பாடங்கொண்ட உத்திகளில் சிலவற்றைத் தம் உரையில் பயன்படுத்தவில்லை. இதைப்போலவே, பேராசிரயரும் தாம் பாடங்கொண்ட சில உத்தி வகைகளைப் பயன்படுத்தவில்லை. தொல்காப்பிய உரையாசிரியர்கள் மூல நூலில் கூறப்படாத உத்திகளை மிகுதியாகப் பயன்படுத்தியுள்ளனர். இதிலும் நச்சினார்க்கினியரே மிகுதியாகப் பயன்படுத்தியுள்ளார். இவர் இவ்வாறு 16 உத்திதகளைப்

it can help you

ias daughter

ujjain m.p

mahakal ki nagari

10 thanks = inbox

Answered by steffiaspinno
2

குறியீட்டு உத்தியின் அடிப்படை இலக்கணங்க‌ள்  

கு‌றி‌யீடு  

  • க‌விதை‌க‌ளி‌ல் கு‌றி‌யீடு அ‌திகமாக இட‌ம் பெறு‌கி‌ன்றன.
  • கு‌றி‌யீடு ஆனது ஆ‌ங்‌கில‌த்‌தி‌ல் symbol  என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • Symbol எ‌ன்பத‌ற்கு ஒ‌ன்று சே‌ர் எ‌ன்று பொரு‌ள்.
  • இரு பொரு‌ட்களு‌க்கு இடையே ஏதேனு‌ம் ஒரு வகை‌யி‌ல் உறவு இரு‌க்கு‌ம்.
  • அது உருவ ஒ‌‌ற்றுமையாக இரு‌க்கலா‌‌ம் அ‌ல்லது அருவமான ப‌ண்பு ஒ‌‌ற்றுமையாக இரு‌க்கலா‌ம்.
  • மறைத்துச் சொல்லவும் மிகுத்துச் சொல்லவும் அழுத்திச் சொல்லவும் பயன்படும் இலக்கிய உத்தியாக கு‌றி‌யீடு உ‌ள்ளது.  

இல‌க்கண‌ம்  

  • சுட்டிய பொருளுக்கும் குறியீட்டுப் பொருளுக்கும் இடையே ஏதேனும் ஒரு தொடர்பு இருத்தல் வேண்டு‌ம்.
  • சுட்டும் பொருள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாக இருத்தல் வேண்டு‌ம்.
  • சுட்டும் பொரு‌ளி‌ன் வா‌யிலாக குறியீட்டுப் பொருள் ஆனது நுண்ணிய முறையில் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
Similar questions