மயிலை சீனி. வேங்கடசாமி நினைவுச் சிறப்பிதழுக்குச் செய்திகள் உருவாக்கித் தருக.
Answers
Answered by
2
மயிலை சீனி. வேங்கடசாமி நினைவுச் சிறப்பிதழுக்குச் செய்திகள்
- மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் மயிலாப்பூரில் சித்த மருத்துவரான சீனிவாசனின் மகனாக பிறந்தவர்.
- தமிழ் இன வரலாற்றை இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிய ஆளுமைகளில் மயிலை சீனி. வேங்கடசாமியும் ஒருவர்.
- இவர் தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
- தமிழர் வரலாறு மற்றும் இலக்கியம் பற்றி ஆய்ந்த இவர் தம் ஆய்வுகள் குறித்து குடியரசு, ஊழியன், செந்தமிழ்ச் செல்வி, ஆரம்பாசிரியன், லஷ்மி முதலிய இதழ்களில் எழுதியவர்.
- கிறித்தவமும் தமிழும், பெளத்தமும் தமிழும், சமணமும் தமிழும், தமிழ் வளர்த்த கலைகள், நந்திவர்மன், களப்பிரர் காலம் முதலிய பல ஆய்வு நூல்களை எழுதியவர்.
- இவர் ஆராய்ச்சிப் பேரறிஞர், தமிழ்ப் பேரவைச் செம்மல் முதலிய விருதுகளை பெற்றவர்.
Similar questions