கடையெழு வள்ளல்களையும் அவர்கள் செய்த செயலையும் கூறுக.
Answers
Answered by
6
கடையெழு வள்ளல்கள் மற்றும் அவர்கள் செய்த செயல்கள்
பேகன்
- மழைக் காலத்தில் மயில் நடனமாடியதை பார்த்த பேகன் அது குளிரால் நடுங்குவதாக எண்ணித் தன் போர்வையினை மயிலுக்கு போர்த்தினார்.
பாரி
- நெடு வழியில் முல்லைக்கொடி ஒன்று பற்றிப் படர ஏதுமில்லால் தவித்ததை கண்ட பாரி, தான் ஏறி வந்த தேரை நிறுத்தி, அதன் மேல் முல்லைக் கொடியினை படரவிட்டான்.
காரி
- காரி இரவலர்க்கு இல்லை எனக் கூறி தன் குதிரை மற்றும் செல்வங்களை கொடுத்து உதவினான்.
ஆய்
- இறைவனுக்கு தன் மன விருப்பதோடு நீல வண்ணக் கல் மற்றும் நாகம் கொடுத்த ஆடையினை ஆய் கொடுத்தான்.
அதியமான்
- சாவா அமிழ்தமான நெல்லிக்கனியினை தான் உண்ணாது ஒளவைக்கு தந்தான் அதியமான் நெடுமான் அஞ்சி.
நள்ளி
- தன் நண்பர்கள் உள்ளம் மகிழுமாறு தான் பெற்ற பொருள்களை நள்ளி குறிப்பறிந்து வழங்கினார்.
ஓரி
- தன் நாட்டின் பகுதிகளை கூத்தர்க்கு பரிசாக வழங்கினான் ஓரி.
Answered by
2
சிறுபாணாற்றுப் படையைப் பாடிய நல்லூர் நத்தத்தனார், ஏழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் கொடைமடச் செயல்கள் பற்றியும் கூறியுள்ளார். கொடைமடச் செயல்கள் என்றால், பகுத்தறியாது மடமையோடு கொடையளித்த செயல்கள் என்று கூறலாம். இத்தகைய செயல்களே அவ்வள்ளல்களுக்குச் சிறப்பைச் சேர்த்தன என்பதும் உண்மையாகும். இந்த வள்ளல்களைப் பற்றிய செய்திகளை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றுப் பாடல்களும் கூறுகின்றன; இதுவே கடையெழு வள்ளல்கள் ஆகும்....
Similar questions