எச்.ஏ. கிருட்டிணனார் ‘கிறித்தவக் கம்பரே’ என்பதை நும் பாடப்பகுதி வழி நிறுவுக
Answers
எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை திருநெல்வேலி மாவட்டம், கரையிருப்பு என்னும் ஊரருகில் ரெட்டியார்பட்டி என்ற கிராமத்தில் 1827 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் நாள் சங்கர நாராயணப் பிள்ளை, தெய்வநாயகியம்மை தம்பதிகளின் மகனாகப் பிறந்தார். பிறப்பால் வைணவரான இவர் பின்னர் கிறித்தவ மதத்துக்கு மாறினார்.
ஆற்றிய பணிகள் தொகு
சாயர்புரம், திருநெல்வேலி,திருவனந்தபுரம் முதலிய இடங்களில் முப்பத்திரண்டு ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார். இக்காலங்களில் இவர் ஆற்றிய சமயப்பணியும், தமிழ்பபணியும் மிகச் சிறப்பானதாகும். இவரது படைப்புகளில் இரட்சியண்ய யாத்திரிகம், இரட்சண்ய மனோகரம்,இரட்சண்ய நவநீதம், இரட்சண்ய சமய நிருணயம் முதலியவை குறிப்பிடத்தக்கவையாகும். இவற்றுள் இரட்சண்ய யாத்திரிகம், இரட்சண்ய சமய நிருணயம் ஆகியவை பாளையங்கோட்டையிலிருந்து வெளிவந்த 'நற்போதகம்' இதழில் வெளிவந்தன. இவரது பணிகளை மயூரம் வேதநாயகம் பிள்ளை, மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை ஆகியோர் பாராட்டியுள்ளனர். இவரது கவித்திறத்தைக் கண்ட அறிஞர் உலகம் கிருஷ்ணப்பிள்ளையை "கிறித்தவக் கம்பர்" எனப் போற்றிப் புகழ்ந்தது.
மேற்கோள்:
நெல்லைத் தமிழ்ச் சான்றோர்கள், ஆசிரியர் நல்லையாராஜ், காவியா பதிப்பகம், சென்னை.
கிறித்தவக் கம்பராக எச்.ஏ. கிருட்டிணனார்
இரட்சணிய யாத்திரிகம்
- ஜான் பன்யன் என்பர் எழுதிய பில்கிரிம்ஸ் புரோகிரஸ் என்ற ஆங்கில நூலினை தழுவி கிறிஸ்துவக் கம்பர் என அழைக்கப்படும் எச்.ஏ. கிருட்டிணனார் அவர்களால் தமிழில் எழுதப்பட்ட நூலே இரட்சணிய யாத்திரிகம் ஆகும்.
- இதில் குமாரப் பருவத்தில் உள்ள இரட்சணிய சரித படலத்தில் இடம் பெறும் இயேசுவின் இறுதிக்கால நிகழ்ச்சி நம் பாடப்பகுதியாக உள்ளன.
கிறித்துவக் கம்பர்
- கம்பர் திருத்தக்க தேவரை பின்பற்றி தன் இராமாயணத்தினை விருத்தப்பாவினால் இயற்றினார்.
- கம்பரை பின்பற்றி எச்.ஏ. கிருட்டிணனார் இரட்சணிய யாத்திரிகத்தினை விருத்தப்பாவினால் இயற்றியுள்ளார்.
- கம்பர் வடமொழியில் இருந்த இராமனின் வரலாற்று காவியத்தினை தழுவி தமிழில் இராமாயணத்தினை எழுதினார்.
- அதுபோலவே பில்கிரிம்ஸ் புரோகிரஸ் என்ற ஆங்கில நூலினை தழுவி எச்.ஏ. கிருட்டிணனார் இயேசுவின் வரலாற்றினை இராட்சணிய யாத்திரிகம் என தமிழில் எழுதினார்.
- மேலும் எச்.ஏ. கிருட்டிணனாரின் பாடல் வரிகள் கம்பரின் வரிகள் போல கவித்திறன் உடையதாக விளங்கியதால் இவர் கிறித்தவக் கம்பர் என அழைக்கப்பட்டார்.