கோடைமழை கதை வாயிலாக விளக்கப்படும் மனித நேயப் பண்புகளை விளக்குக.
Answers
Answered by
9
மனித நேயம் (மனித நேயம் = மனிதம் + நேயம்) தொடர்புடைய பலம் வாய்ந்த குணங்களாக அன்பு, கருணை, இரக்கம் மற்றும் சமூக நுண்ணறிவு இருக்கின்றன. சக மனிதர்களிடம் அன்பு காட்டுவதை மனித நேயம் எனக் கூறலாம். இதில் உயிரிரக்கப் பண்பு என்பது மனித நேயத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. பிறருக்கு துன்பம் அளிக்காமல் இருத்தல், இயலாதவர்களின் துன்பத்தைப் போக்குதல், இளகிய இதயமும், இரக்க சுபாவமும், உறுதியான செயல்பாடுகளும் கொண்டிருத்தல் என்றும் கூறலாம். 1893-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங்களின் பாராளுமன்றத்தில் அனைவரையும், ‘‘சகோதர... சகோதரிகளே...’’ என்று விவேகானந்தர் உரையாற்றி உலக மக்களிடையே மனித நேயத்தை எடுத்துரைத்தார்.
Answered by
6
கோடைமழை கதை வாயிலாக விளக்கப்படும் மனித நேயப் பண்பு
ஆறுமுகம்
- மனைவியை இழந்த ஆறுமுகம் தன் குழந்தையினை கவனமாக வளர்த்தார்.
- தற்போது தன் மகனின் மனைவி காய்ச்சலால் இறந்ததால், மனமுடைந்து விஷம் குடித்து இறந்த தன் மகனின் குழந்தையினை கவனிக்கும் பொறுப்பினையும் ஏற்றார்.
பாபு
- வயது முதிர்வின் காரணமாக சில உடல் கோளாறுகளால் தவித்த ஆறுமுகம் மருத்துவமனைக்கு சென்று மருந்து சீட்டினை வாங்கி மருந்து கடைக்காரனான பாபுவிடம் சென்றார்.
- பாபு ஆறுமுகத்திடம் ஒருமுறை குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு தம்பதி இருக்கிறார்கள்.
- உன் பேரனை அவர்களுக்கு தத்துக் கொடுத்துவிடுங்கள் என்றான்.
- ஆரம்பத்தில் அதை ஏற்காத ஆறுமுகம் குழந்தைக்கு தாய் தந்தை பாசம் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தினால் மருந்து வாங்கிய போது பாபுவிடம் சம்மதம் சொன்னார்.
மனித நேயம்
- மறுநாள் குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு தம்பதி ஆறுமுகத்திடம் இருந்து குழந்தையை பெற்றனர்.
- மேலும் நீங்களும் எங்களுடனே வந்துவிடுங்கள், ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்கும் என ஆறுமுகத்தையும் தங்களுடன் வருமாறு அழைத்தனர்.
- பெற்றோர்கள் இல்லாத குழந்தைக்கும், யாரும் இல்லாத ஆறுமுகத்திற்கும் ஆதரவு அளிப்பதாக கூறிய தம்பதியின் வழியே மனித நேயம் வெளிப்பட்டது.
Similar questions
India Languages,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
Math,
10 months ago
Computer Science,
10 months ago
Science,
1 year ago