இயற்பியல் அளவுகளின் வகைகளை விவரி
Answers
Answered by
9
இயற்பியல் அளவுகளின் வகைகள்
இயற்பியல் அளவுகள்
- இயற்பியல் அளவுகள் என்பது அளவிடப்படக்கூடியதும், அதன் மூலமாக இயற்பியல் விதிகளை விவரிக்கத் தக்கதுமான அளவுகள் என அழைக்கப்படுகின்றன.
- இயற்பியல் அளவுகள் இரு வகைப்படும்.
- அவை அடிப்படை அளவுகள் மற்றும் வழி அளவுகள் ஆகும்.
அடிப்படை அளவுகள்
- அடிப்படை அளவுகள் என்பது வேறு எந்த இயற்பியல் அளவுகளாலும், குறிப்பிடப்பட இயலாத அளவுகள் என அழைக்கப்படுகின்றன.
- (எ.கா) நீளம், நிறை, காலம், மின்னோட்டம், வெப்பநிலை, ஒளிச்செறிவு மற்றும் பொருளின் அளவு ஆகும்.
வழி அளவுகள்
- வழி அளவுகள் என்பது அடிப்படை அளவுகளால் குறிப்பிடக்கூடிய அளவுகள் என அழைக்கப்படுகின்றன.
- (எ.கா) பரப்பு, கனஅளவு, திசை வேகம், முடுக்கம், மற்றும் விசை ஆகும்.
Similar questions