பின்வருவனவற்றுள் வைரஸ்களைப் பற்றிய சரியான கூற்று எது? அ) வளர்சிதை மாற்றத்தைக் கொண்டுள்ளன. ஆ) நிலைமாறும் ஒட்டுண்ணிகளாகும். இ) DNA அல்லது RNA-வை கொண்டுள்ளன. ஈ) நொதிகள் காணப்படுகின்றன.
Answers
Answered by
0
third is the answer "இ"
Answered by
1
DNA அல்லது RNA-வை கொண்டுள்ளன
வைரஸ்
- இலத்தீன் மொழியில் இருந்து பெறப்பட்ட வைரஸ் என்ற சொல்லின் பொருள் நச்சு என்பது ஆகும்.
- வைரஸ்கள் என்பவை மிகவும் நுண்ணிய, செல்லுக்கு உள்ளே வாழ்கின்ற ஒரு நிலைமாறா ஒட்டுண்ணி ஆகும்.
- வைரஸ்கள் புரத உறையால் சூழப்பட்ட உட்கரு அமிலத்தினை கொண்டு உள்ளன.
- வைரஸ்கள் இயற்கையான அமைப்பில் DNA அல்லது RNA உட்கரு அமிலத்தினை கொண்டு உள்ளன.
- வைரஸ்களைப் பற்றிய படிப்பிற்கான அறிவியல் பிரிவு வைரஸ் இயல் (Virology) என அழைக்கப்படுகிறது.
- மிகவும் நுண்ணிய அளவினை உடைய வைரஸ்கள் பாக்டீரியங்களை விட அளவில் சிறியவை ஆகும்.
- பொதுவாக வைரஸ்கள் 20nm முதல் 300nm வரை விட்டம் கொண்டவையாக உள்ளன.
Similar questions