லைக்கென்களின் பொதுப் பண்புகளை எழுதுக.
Answers
Answered by
7
லைக்கென்களின் பொதுப் பண்புகள்
- பாசிகள் மற்றும் பூஞ்சைகளுக்கு இடையே உருவாகும் ஒருங்குயிரி அமைப்பிற்கு லைக்கென்கள் என்று பெயர்.
- லைக்கென்களில் பாசி உறுப்பினர் பாசி உயிரி அல்லது ஒளி உயிரி எனவும், பூஞ்சை உறுப்பினர் பூஞ்சை உயிரி எனவும் அழைக்கப்படுகிறது.
- பாசி உயிரி பூஞ்சைக்கு ஊட்டத்தை அளிக்கிறது.
- பூஞ்சை உயிரி பாசிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது மற்றும் உடலத்தைத் தளப்பொருள் மீது நிலைப்படுத்த ரைசினே என்ற அமைப்பினை ஏற்படுத்துவதில் உதவுகின்றன.
- துண்டாதல், சொரீடியங்கள், ஐசிடியங்கள் மூலமாக பாலிலா இனப்பெருக்கம் நடைபெறுகின்றன.
- பாசி உயிரி உறக்க நகராவித்துகள், ஹார்மோ கோனியங்கள், நகராவித்துகள் முதலியன முறைகளில் இனப்பெருக்கம் செய்கின்றன.
- பூஞ்சை உயிரி ஆனது பாலினப் பெருக்கத்தில் ஈடுபட்டு ஆஸ்கோ கனி உடலங்களை உருவாக்குகின்றன.
Similar questions
Hindi,
4 months ago
Math,
9 months ago
Geography,
9 months ago
Math,
1 year ago
Social Sciences,
1 year ago