ரைசோபஸின் பாலிலா இனப்பெருக்கம் பற்றி விவரி.
Answers
Answered by
0
ரைசோபஸின் பாலிலா இனப்பெருக்கம்
- மைசீலியத்திலிருந்து வேரிகள் தோன்றும் இடத்திற்கு எதிராக சாதகமான சூழ்நிலையில் மேல் நோக்கி வித்தகத் தாங்கிகள் தோற்றுவிக்கப்படுகின்றன.
- ஒரு செல் அமைப்பினை உடைய கிளைகள் இல்லா பல்லுட்கருக்களைக் கொண்ட வித்தகத் தாங்கிகளின் நுனியில் பை போன்ற வித்தகம் உள்ளது.
- ஒவ்வொரு வித்தகத் தாங்கியும் ஒரு வித்தகத்தினை கொண்டு உள்ளன.
- காலு மெல்லா என வித்தகத்தின் மலட்டு மையப்பகுதி அழைக்கப்படுகிறது.
- வித்தகத்தின் மலட்டு மையப்பகுதி காலு மெல்லாவைச் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து வித்துகள் உருவாகின்றன.
- வித்தகச் சுவர் வெடிக்கின்ற நிலையில் காலு மெல்லா சிதைவடைந்து வித்துகள் வெளியேற்றப்படுகின்றன.
- தகுந்த வளர் தளத்தில் வித்துகள் விழுந்து அவை முளைத்துப் புதிய மைசீலியத்தினை உருவாக்குகின்றன.
Similar questions
Business Studies,
4 months ago
Business Studies,
4 months ago
Computer Science,
4 months ago
Science,
9 months ago
Science,
9 months ago
Psychology,
1 year ago
English,
1 year ago