Biology, asked by anjalin, 8 months ago

வள‌ர்மா‌ற்ற‌ ம‌ற்று‌ம் ‌சிதைவு மா‌ற்ற ‌வினைகளு‌க்கு இடையேயான வேறுபா‌ட்டினை தருக.

Answers

Answered by ʙᴇᴀᴜᴛʏᴀɴɢᴇʟ
2

Explanation:

வேதிச் சிதைவு (Chemical decomposition) என்பது ஓரு வேதிச்சேர்மத்தை தனிமங்களாக அல்லது சிறு சேர்மங்களாகப் பிரிக்கும் வினைவகையாகும். சில நேரங்களில் இவ்வினை வேதித் தொகுப்பு வினைக்கு நேரெதிரான வினை என்றும் கருதப்படுகிறது. பெரும்பாலும் இவ்வகைச் சிதைவு வினைகள் வேதியியலில் விரும்பப்படுவதில்லை. ஒரு வேதிச் சேர்மம் கொண்டுள்ள அதன் நிலைப்புத்தன்மை, அச்சேர்மம் சுற்றுச்சூழலில் இடம்பெற்றுள்ள வெப்பம், கதிரியக்கம், ஈரப்பதம், அல்லது ஒரு கரைப்பானின் அமிலத்தன்மை, ஆகிய காரணிகளால் முடிவாகக் கட்டுப்படுத்தப்படுகிறது. சிதைவுவினைகளின் செயல்முறை விவரங்கள் சரியான முறையில் வரையறுக்கப்படவில்லை. மாறாக, ஒரு மூலக்கூறு சிறு துண்டுகளாக உடையலாம் என்கின்ற போக்கிலேயே வரையறுக்கப்பட்டுள்ளது. அணுப் பொருண்மை அலைமாலையியல், மரபார்ந்த எடையறி பகுப்பாய்வு மற்றும் வெப்பஞ்சார்ந்த எடையறி பகுப்பாய்வு போன்ற பல்வகையான பகுப்பாய்வு முறைகளில் வேதிச்சிதைவு வினை அலசி ஆராயப்பட்டுள்ளது.

சற்று விரிவாக அலசப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் வேதிச் சிதைவு என்பது ஒரு சேர்மம் ஒருபருப்பொருள் நிலையில் இருந்து ஒன்று அல்லது இரண்டு நிலைகளுக்கு பிரிவதையும் உள்ளடக்கியது என்று வரையறை செய்யப்பட்டுள்ளது [1]

வேதியியலில் மூன்று வகையான சிதைவு வினைகள் உள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. வெப்பச் சிதைவு, மின்பகுச் சிதைவு, வினையூக்கிச் சிதைவு என்பன அம்மூன்று வகைச் சிதைவு வினைகளாகும்.

Answered by steffiaspinno
0

வள‌ர் மாற்ற‌ ம‌ற்று‌ம் ‌சிதைவு மா‌ற்ற ‌வினைகளு‌க்கு இடையேயான வேறுபா‌டு  

வள‌ர் மா‌ற்ற‌ ‌வினைக‌ள்  

  • வள‌ர் மா‌ற்ற‌ ‌வினைக‌ள் ஆனது புரோ‌ட்டோ‌பிளாச க‌ட்டமை‌ப்பு ‌வினைக‌ள் ஆகு‌ம்.
  • வள‌ர் மா‌ற்ற‌ ‌வினைக‌ளி‌ல் ‌‌சிறு ‌சிறு மூல‌க்கூறுக‌ள் ஒ‌ன்றாக இணை‌ந்து பெ‌ரிய மூல‌க்கூறுகளை உருவா‌க்கு‌கி‌ன்றன.
  • வள‌ர் மா‌ற்ற‌ ‌வினைக‌ளி‌ல் வே‌திய ஆ‌ற்ற‌ல் உருவா‌க்க‌ப்‌ப‌ட்டு சே‌மி‌க்க‌ப்படு‌கிறது.
  • அ‌மினோ அ‌மில‌ங்க‌ள் சே‌ர்‌ந்து புரத‌‌ம் உ‌ற்ப‌த்‌தியாதலை வள‌ர் மா‌ற்ற‌ ‌வினைகளு‌க்கு உதாரணமாக கூறலா‌ம்.

‌சிதைவு மா‌ற்ற‌ ‌வினைக‌ள்

  • ‌சிதைவு மா‌ற்ற‌ ‌வினைக‌ள் ஆனது ‌சிதைவூ‌ட்டு‌ம் ‌வினைக‌ள் ஆகு‌ம்.
  • ‌சிதைவு மா‌ற்ற‌ ‌வினைக‌ளி‌ல் ‌‌பெ‌ரிய மூல‌க்கூறுக‌ள் ‌உடை‌க்க‌ப்ப‌ட்டு சிறு ‌சிறு மூல‌க்கூறுகளை உருவா‌க்கு‌கி‌ன்றன.
  • ‌சிதைவு  மா‌ற்ற‌ ‌வினைக‌ளி‌ல் சே‌மி‌க்க‌ப்ப‌ட்ட வே‌திய ஆ‌ற்ற‌ல் ஆனது வெ‌ளி‌விடப்‌ப‌ட்டு பய‌ன்படு‌த்தப்படு‌கிறது.
  • குளு‌க்கோ‌ஸ் மூல‌க்கூறு ஆனது ‌நீ‌ர் ம‌ற்று‌ம் கா‌ர்ப‌ன் டை ஆ‌க்சைடாக ‌சிதைவடைதலை ‌சிதைவு மா‌ற்ற‌ ‌வினைகளு‌க்கு உதாரணமாக கூறலா‌ம்.
Similar questions