எப்பிரிவு தாவரம் ஓங்கிய கேமீட்டக தாவர சந்ததியைக் கொண்டது? அ) டெரிடோஃபைட்கள் ஆ) பிரையோஃபைட்கள் இ) ஜிம்னோஸ்பெர்ம்கள் ஈ) ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
Answers
Answered by
0
பிரையோஃபைட்கள்
- ஈரமான, நிழலான இடங்களில் வளரக்கூடிய எளிமையான நில வாழ்த் தாவரங்கள் அடங்கிய பிரிவு பிரையோஃபைட்கள் ஆகும்.
- இந்த பிரிவு தாவரம் ஓங்கிய கேமீட்டக தாவர சந்ததியைக் கொண்டதாக உள்ளது.
- இந்த தாவரங்களில் வாஸ்குலார்த் திசுக்கள் காணப்படுவது கிடையாது.
- இதன் காரணமாக இவை வாஸ்குலார் திசுக்களற்ற பூவாத் தாவரங்கள் என அழைக்கப்படுகின்றன.
- இந்த வகைத் தாவரங்களில் பெரும்பாலானவை நில வாழ் தாவரங்களாக இருந்தாலும் அவற்றின் வாழ்க்கை சுழற்சியினை நிறைவு செய்ய நீர் அவசியமாதலால் தாவரப் பெரும் பிரிவின் நீர்நில வாழ்வன என அழைக்கப்படுகின்றன.
- இவைகள் வேர், தண்டு, இலை என வேறுபாடுகள் அற்ற தாவர உடலம் கொண்ட கேமீட்டக தாவரச் சந்ததியைச் சார்ந்தது ஆகும்.
Similar questions