ஜிம்னோஸ்பெர்ம்களில் கருவூண் திசு உருவாவது அ) கருவுறுதலின் போது ஆ) கருவுறுதலுக்கு முன் இ) கருவுறுதலுக்குப் பின் ஈ) கரு வளரும் போது
Answers
Answered by
3
கருவுறுதலுக்கு முன்
ஜிம்னோஸ்பெர்ம்கள்
- ஜிம்னோஸ்பெர்ம்கள் திறந்த விதைத் தாவரங்கள் ஆகும்.
- இவற்றில் பெரும்பாலானவை பசுமை மாறா மரங்கள் அல்லது புதர் செடிகளாக உள்ளன.
- நீட்டம் போன்ற ஒரு சில தாவரங்கள் மட்டும் வன்கொடிகளாக உள்ளன.
- தாவர உடல் வித்தகத் தாவரச் சந்ததியைச் சார்ந்து உள்ளது.
- இது வேர், தண்டு, இலை என வேறுபாடுற்று காணப்படுகிறது.
- இதில் நன்கு வளர்ச்சி அடைந்த ஆணி வேர்த்தொகுப்பு உள்ளது.
- ஆண் மற்றும் பெண் கூம்புகள் தனித்தனியே உண்டாக்கப்படுகின்றன.
- இதில் காற்றின் மூலம் மகரந்த சேர்க்கை நடைபெறுகிறது.
- மகரந்தக் குழாய் மூலம் ஆண் உட்கருக்கள் எடுத்துச் செல்லப்பட்டு கருவுறுதல் நடைபெறுகிறது.
- இந்த வகை தாவரங்களில் பல்கருநிலை காணப்படுகிறது.
- திறந்த சூல்கள் விதைகளாக மாற்றம் அடைகின்றன.
- ஒற்றை மடிய கருவூண் திசு கருவுறுதலுக்கு முன்பே தோன்றுகிறது.
- வாழ்க்கைச் சுழற்சியில் ஓங்கிய வித்தகத் தாவர சந்ததி மற்றும் மிகக் குறுகிய கேமீட்டகத் தாவர சந்ததி முதலிய உடைய தெளிவான சந்ததி மாற்றம் உருவாகிறது.
Similar questions
History,
4 months ago
Physics,
4 months ago
History,
4 months ago
Social Sciences,
10 months ago
English,
10 months ago
Social Sciences,
1 year ago
Economy,
1 year ago