ஆஞ்சியோஸ்பெர்ம்களுக்கும், ஜிம்னோஸ்பெர்ம்களுக்கும் இடையே காணப்படும் பொதுவான இரண்டு பண்புகளை எழுதுக?
Answers
Answered by
0
Answer:
please write in English
Answered by
0
ஆஞ்சியோஸ்பெர்ம்கள் மற்றும் ஜிம்னோஸ்பெர்ம்கள் ஆகியவற்றிற்கு இடையே காணப்படும் பொதுவான பண்புகள்
- வேர், தண்டு, இலைகளை உடைய நன்கு வரையறுக்கப்பட்ட தாவர உடல் ஆனது ஆஞ்சியோஸ்பெர்ம்கள் மற்றும் ஜிம்னோஸ்பெர்ம்கள் ஆகிய இரு வகை தாவரங்களிலும் காணப்படுகிறது.
- இரு விதையிலைத் தாவரங்களில் உள்ளதை போன்றே ஜிம்னோஸ்பெர்ம்களும் கேம்பியத்தினை கொண்டு இருக்கின்றன.
- இரண்டிலும் தண்டில் யூஸ்டீல் காணப்படுகின்றது.
- நீட்டம் என்ற ஜிம்னோஸ்பெர்ம் தாவரத்தில் உள்ள இனப்பெருக்க உறுப்புகள் மூடு தாவரங்களின் மலர்களை ஒத்தாக உள்ளது.
- இரண்டிலும் வித்தகத் தாவரத்தின் முதல் செல்லைக் குறிப்பதாக கரு முட்டை உள்ளது.
- சூல்களைச் சூழ்ந்து சூலுறை காணப்படுகிறது.
- ஆஞ்சியோஸ்பெர்ம்கள் மற்றும் ஜிம்னோஸ்பெர்ம்கள் ஆகிய இரு வகை தாவரங்களும் விதைகளை உருவாக்குகின்றன.
- இரு வகை தாவரங்களிலும் ஆண் உட்கருக்கள் மகரந்தக் குழலின் உதவியுடன் எடுத்துச் செல்லப்படுகின்றன.
Similar questions