பாசிகளின் வகுப்புகளை வரிசைப்படுத்துக.
Answers
Answered by
0
Answer:
please write in English
Answered by
0
பாசிகளின் வகுப்புகளை வரிசைப்படுத்துதல்
- பாசிகள் உண்மையான வேர், தண்டு மற்றும் இலைகள் அற்ற எளிய தாவரங்கள் ஆகும்.
- 1935 ஆம் ஆண்டு F.E. ஃப்ரிட்ச் என்ற உயிரியல் அறிஞர் பாசிகளின் அமைப்பு மற்றும் இனப்பெருக்கம் (The structure and reproduction of the Alage) என்ற நூலினை வெளியிட்டார்.
- பாசிகளின் அமைப்பு மற்றும் இனப்பெருக்கம் என்ற நூலில் பாசிகளில் காணப்படும் நிறமிகள், கசையிழை வகை, சேமிக்கப்படும் உணவு, உடலின் அமைப்பு, இனப்பெருக்க முறை முதலிய காரணிகளின் அடிப்படையில் பாசிகள் 11 வகுப்புகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
- அவை முறையே குளோரோஃபைசி, ஸாந்தோஃபைசி, கிரைசோஃபைசி, பேசில்லேரியோஃபைசி, கிரிப்டோஃபைசி, டைனோஃபைசி, குளோரோ மோனோடினி, யூக்ளினோஃபைசி, ஃபியோஃபைசி, ரோடோஃபைசி மற்றும் சயனோஃபைசி ஆகும்.
Similar questions