டையனோஃபைசி வகுப்பில் உள்ள பாசிகளின் நிறமிகள் மற்றும் உணவு சேமிப்பைப் பற்றி குறிப்பிடுக.
Answers
Answered by
1
ஆல்காக்கள் தற்சாற்பு ஊட்டமுறையை உடையவை. பச்சையம் உண்டு. இவை ஆக்ஸிஜனை வெளியிடும் வகையான ஒளிச் சேர்க்கை புரியும் உயிரிகள். நீருள்ள சூழலில் தோன்றி, வளர்ந்து வெற்றிகரமாக நிலைபெற்றுள்ளன. ஆல்காக்களைப் பற்றிய அறிவியல் துறை ஆல்காலஜி அல்லது ஃபைக்காலஜி என்று அழைக்கப்படுகிறது.
ஆல்காக்களின் உடலத்தில் வேர், தண்டு, இலை என்று வேறுபாடு காணப்படுவதில்லை. இது போன்ற உடலமைப்பை 'காலஸ்" என்று அழைக்கிறோம். இவை வாஸ்குலார் திசுக்களையும் பெற்றிருப்பதில்லை. தாவர உலகத்தைச் சார்ந்த இந்த ஆல்காக்களின் இனப்பெருக்க உறுப்புகள் வளமற்ற செல்களால் சூழப்பட்டிருப்பதில்லை.
Answered by
1
டையனோஃபைசி வகுப்பில் உள்ள பாசிகளின் நிறமிகள் மற்றும் உணவு சேமிப்பு
பாசிகள்
- பாசிகளின் அமைப்பு மற்றும் இனப்பெருக்கம் என்ற நூலில் பாசிகளில் காணப்படும் நிறமிகள், கசையிழை வகை, சேமிக்கப்படும் உணவு, உடலின் அமைப்பு, இனப்பெருக்க முறை முதலிய காரணிகளின் அடிப்படையில் பாசிகள் 11 வகுப்புகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
டையனோஃபைசி
நிறமிகள்
- டையனோஃபைசி வகுப்பில் உள்ள பாசிகளில் பச்சையம் a மற்றும் c, கரோட்டினாய்டுகள், ஸாந்தோஃபில் முதலியன நிறமிகள் உள்ளன.
கசையிழை
- டையனோஃபைசி வகுப்பில் உள்ள பாசிகளில் இரு சமமற்ற (சாட்டை ஒத்த கசையிழைகள்) பக்கவாட்டில் அமைந்த கசையிழை வெவ்வேறு தளத்தில் உள்ளன.
உணவு சேமிப்பு
- டையனோஃபைசி வகுப்பில் உள்ள பாசிகளில் தரசம் மற்றும் எண்ணெய் ஆனது உணவாக சேமிக்கப்படுகிறது.
Similar questions