சைகஸ் கூட்டிலைக் காம்பின் உள்ளமைப்பை விவரி.
Answers
Answered by
1
Answer:
me to please like all please please
Answered by
2
சைகஸ் கூட்டிலைக் காம்பின் உள்ளமைப்பு
- சைகஸ் கூட்டிலைக் காம்பின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் தடித்த கியூட்டிகிள் சூழ்ந்ததாக புறத்தோல் என்ற வெளிப்புற அடுக்குகள் உள்ளன.
- புறத்தோலின் உட்புறமாக ஸ்கிளிரன்கைமாவினால் ஆன புறத்தோல் அடித்தோல் உள்ளது.
- புறத்தோல் அடித்தோல் ஆனது இலைக் காம்பின் மேற்புறத்தில் இரு அடுக்குகளாலும், கீழ்ப்புறத்தில் பல அடுக்குகளாலும் ஆனது.
- கூட்டிலைக் காம்பின் அடிப்படைத்திசு பாரன்கைமாவினால் ஆனது.
- கூட்டிலைக்காம்பின் தனித்தன்மையாக வாஸ்குலார் கற்றைகள் தலைகீழ் ஒமேகா வடிவில் அமைந்திருந்தது.
- ஒவ்வொரு வாஸ்குலார் கற்றையும் ஓரடுக்கில் அமைந்த ஸ்கிளிரன்கைமாவினால் ஆன கற்றை உறையைப் பெற்றுள்ளது.
- வாஸ்குலார் கற்றைகள் ஒருங்கமைந்தவை, திறந்தவை மற்றும் உள்நோக்கிய சைலம் கொண்டவை ஆகும்.
- கற்றைகளுக்கு வெளிப்புறமாக அகத்தோல் மற்றும் பெரிசைக்கிள் காணப்படுகிறது.
Similar questions